
புண்ணிய வர்ஷமாம் பாரத திருநாட்டின் தெற்கிலே முதல் இந்துத்தவ அரசின் பிதாமகனும், கர்நாடக பா.ஜ.கவின் ஆள், பணம், அடியாள் புரவலர்களாக பட்டையைக் கிளப்பும் ரெட்டி சகோதரர்களின் மூத்த தலயான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ அதிகாரிகள் 5.9.2011 அன்று காலை முகூர்த்த நேரத்தில் கைது செய்திருக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா இவரோடு டேக்கா கொடுத்த போது ஆட்சியையே கவிழ்க்க முயன்று மேலிடத்திற்கு பாடம் புகட்டிய ரெட்டி பிரதர்சின் மேல் அத்வானிக்கே கொஞ்சம் பயமுண்டு. மேலும் முன்பு சுஷ்மா ஸ்வராஜ் பெல்லாரி தொகுதியில் போட்டியிடும் போது ரெட்டி பிரதர்ஸ் கவனிப்பில் திக்கு முக்காடிப் போனார். மேலும் ரெட்டி பிரதர்சின் பிசினசோடும் அவருக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அந்த வகையிலும் பா.ஜ.க மேலிடம் இவர்கள் மீது பெருங்கருணை வைத்திருக்கிறது.
இதனாலேயே பா.ஜ.க அமைச்சரவையில் யார் அமைச்சர்கள் என்று முடிவு செய்யும் வீட்டோ அதிகாரம் இவர்களிடமே இருந்தது. இவர்களோடு மோதி எடியூரப்பாவே மூக்குடைபட்டுள்ளார். அவரது ஆட்சியைக் கவிழ்க்க ரெட்டிகாருகள் நடத்திய பாரதப் போரை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது. சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் ரெய்டு நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றனர். ரெட்டியின் உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மானேனஜிங் டைரக்டருமான சீனிவாச ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள் எனத் தெரிகிறது.
ரெய்டுக்கு போன சி.பி.ஐ அதிகாரிகளால் ரெட்டி வீட்டிலிருந்து நாலரைக் கோடி ரூபாயும் முப்பது கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது. கூடவே இரண்டு ஹெலிகாப்டர்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ரெட்டிகளின் கைச்செலவுக்கான விசயங்களை. இதையே ஏன் பூதகரமான செய்தியாக காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை உண்மையான பிரம்மாண்டமான சுருட்டல்களை மறைப்பதற்கான தந்திரமோ தெரியவில்லை. ரெட்டியின் 7 நட்சத்திர வாழ்க்கையோடு ஒப்பிடும் போது துபாய் ஷேக்கெல்லாம் பிச்சை வாங்க வேண்டும். ரெட்டியின் ஆடம்பர வாழ்க்கை குறித்த பதிவு விரைவில் வெளியிடுகிறோம்.
மேலதிகமாக சட்டவிரோத சுரங்கத் தொழில் செய்து இரும்புத் தாதுவை இவர்கள் எந்த நாட்டிற்கு அனுப்பி பலநூறு கோடிகளைச் சம்பாதித்தார்கள்? சீனா என்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆம். ஆர்.எஸ்.எஸ்இன் ஜன்ம விரோதியான சீனத்திற்கு ஏற்றுமதி செய்துதான் இந்த ஆர்.எஸ்.எஸ் அம்பி பிரம்மாண்டமான சொத்துக்களை சம்பாதித்தார்.
ரெட்டி சகோதரர்கள் மோசடி செய்து, அரசின் உதவியோடு, அரசின் ஆசிர்வாதத்தோடு அரசையே ஏமாற்றி சுரங்கத் தொழில் செய்து சில ஆயிரம் கோடிகளையாவது சுருட்டியிருப்பார்கள். இந்த ஊழல் வெளிவந்து இத்தனை மாதங்கள் ஆகியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனை காலம் இவர்களை விட்டு வைத்திருந்ததே தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொள்வதற்காகத்தான் போலும்.
அதனால்தான் பா.ஜ.க மேலிடம் இத்தனை நடந்தும், ரெட்டி ஒரு புண்ணியவான் என்று மெச்சுவதோடு அவர் சட்டப்படி தன்மீதான குற்றச்சாட்டுகளை தகர்ப்பார் என்று தெம்பாக சொல்கிறார்கள். ஆனாலும் தற்போது ரெட்டி கைது சூடாக கர்நாடக அரசியலை மையம் கொண்டிருப்பதனால் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் முப்பது பேர் ராஜினாமா செய்வார்களா என்றொரு தகவல் பெங்களூரூவில் வலுவாக வலம் வருகிறது. அது நடந்தால் எடியூரப்பாவின் பினாமி சதானந்தா சமாளிப்பது கடினம். ஆகவே கர்நாடகாவின் முதல் இந்துத்வ அரசை காப்பாற்ற வேண்டுமென்றால் ரெட்டிகாருக்களை காப்பாற்றுவது பா.ஜ.கவிற்கு அவசியம்.
லோக்அயுக்தா அறிக்கையின் படி எடியூரப்பா மற்றும் ரெட்டி பிரதர்ஸ் முன்னிலை வகிக்கும் இந்த சுரங்க ஊழலில் மட்டும் 16,000 கோடி ரூபாய்க்கும் மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய கேடிகளை காப்பாற்றும் கட்சிதான் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் முன்னிலை வகித்தது. பதிலுக்கு அந்த மேளாக் கும்பலும் எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ் கொள்ளை கேங் குறித்து ஒன்றும் சொல்லவில்லை. எல்லாம் பரஸ்பர புரிந்துணர்வுதான்.
4.9.211 அன்று நடந்த விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சியில் அண்ணா ஹசாரே ஊழல் மேளா குறித்து விவாதம் நடத்தினார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ் அம்பி அரவிந்தன் ( முன்னாள் காலச்சுவடு ஆசிரியர், முன்னாள் இந்தியா டுடே, ) என்பவர் ரொம்பவும் ஜனநாயகமாக அண்ணாவுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருந்தார். இவர்களைப் போன்ற கொள்கைச் சிங்கங்கள் முதலில் எடியூரப்பா, ரெட்டி பிரதர்சு கேங் பற்றி கருத்துச் சொல்லட்டும். அவர்களை கண்டித்து களமிறங்கட்டும். பிறகு நம்மைப் போன்ற பாமரர்களுக்கு ஊழல் ஒழிப்பு பற்றி வகுப்பெடுக்கட்டும்.
____________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
தொடர்புடைய பதிவுகள்:
- பாரதமாதவின் தலைசிறந்த சுயம்சேவக் எடியூரப்பா!
- கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாணபிஷேகமும் !!
- கர்நாடகாவில் “சாமி சத்தியமா” காமெடி காட்சிகள்!
- எடியூரப்பா – தென்னிந்தியாவின் முதல் பா.ஜ.க முதலமைச்சரின் லேட்டஸ்ட் ஊழல்!
- பெல்லாரி ரெட்டி சகோதரர்கள்: சுரங்கத் தொழில் மாஃபியாகள்
- கர்நாடகா அரசை ஆட்டுவிக்கும் திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகள்