Tuesday, April 15, 2025
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!

கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!

-

செய்தி -97

விஜய்-மல்லையா

கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன. நொடிந்து போயிருக்கும் கிங்ஃபிஷர் பற்றி பேசுவதற்கான இந்த சந்திப்பு நீண்ட காலம் முன்பே திட்டமிடப்பட்டிருந்தாலும் வெளிநாட்டில் இருப்பதாக காரணம் சொல்லி மல்லையா கூட்டத்துக்கு வரவில்லை.

‘விஜய் மல்லையா நேரில் வந்து கிங்ஃபிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை எப்படி அடைக்கப் போகிறார் என்பதை விளக்க வேண்டும்’ என்று கடன் கொடுத்த வங்கிகள் கேட்டிருக்கின்றன. வங்கிகள் கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு சுமார் ரூ 7000 கோடி கடன் கொடுத்திருக்கின்றன. கூடவே 2010-ல் கடன்களில் ஒரு பகுதியை  பங்காக மாற்றும் ஒப்பந்ததத்தின் படி பெற்ற 20% பங்குகளையும் வைத்திருக்கின்றன.

பாரத ஸ்டேட் வங்கி ரூ 1,400 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ 700 கோடியும், பாங்க் ஆப் பரோடா ரூ 500 கோடியும் கடன் கொடுத்திருக்கின்றன.  கிங்ஃபிஷருக்கு கொடுத்த கடன்களை ஏற்கனவே வாராக் கடன்களாக வங்கிகள் வகைப்படுத்தி விட்டிருக்கின்றன.

இவ்வளவு பணத்தையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் மல்லையாவுக்கு கிங்ஃபிஷரின் கடன்களை அடைப்பதற்கோ, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கோ இனிமேல் நேரம் இருக்காது. கடன் கொடுத்த வங்கிகள்தான் அவருக்குப் பின்னால் ஓட வேண்டும்.

கடன் வாங்கி விட்டு ஏமாற்ற நினைக்கும் மல்லையாவை பிடித்து அடித்து பணத்தை வாங்க விரும்பினால் அவரை எங்கு தேட வேண்டும்?

முதலில் கர்நாடகா சுப்ரமணியர் கோவிலில் வழிபாடு நடத்த போயிருக்கிறாரா என்று தேடலாம்.

யூபி குழுமத்தின் சாராய வியாபாரத்தை பெருக்குவதற்கான கிங்ஃபிஷர் காலண்டர் புகைப்படங்கள் எடுக்க உல்லாச தலங்களுக்கு அவர் பயணம் போயிருக்கலாம்.

சஹாரா போர்ஸ் இந்தியா கார் பந்தய அணி அல்லது ராயல் சேலஞ்சர்ஸ், ஐபிஎல் அணி அல்லது மோகன் பஹான், ஈஸ்ட் பெங்கால் ஆகிய  முன்னணி கால்பந்து அணிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கலாம்.

இங்கெல்லாம் ஆள் கிடைக்கவில்லை என்றால் அவர் உறுப்பினராக ஜனநாயக கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் ராஜ்ய சபைக்குப் போய் தேடலாம். இல்லை இந்தக் கேடியை பிடித்து கொடுப்பவருக்கு தகுந்த சன்மானம் கொடுக்கப்படும் என்று வங்கிகள் அறிவிக்கலாம். வீடு புகுந்து திருடும் திருடர்களை பிடிப்பதற்கெல்லாம் தனிப்படை, சிஐடி என்று மிரட்டும் காவல்துறை 7000 கோடியை முழுங்கிய இந்த கார்ப்பரேட் கள்ளனை ஏன் பிடிக்கவில்லை?

இதையும் படிக்கலாம்

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: