Thursday, April 17, 2025
முகப்புசெய்திதடையை மீறி திருச்சியில் ஜனவரி -25 மொழிப்போர் தியாகிகள் தினம்

தடையை மீறி திருச்சியில் ஜனவரி -25 மொழிப்போர் தியாகிகள் தினம்

-

னவரி – 25 மொழிப்போர் தியாகிகளின் தினத்தையொட்டி திருச்சியில் 25.01.2016 அன்று காலை தென்னூர் உழவர்சந்தை அருகே உள்ள மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவிடங்களில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர் அன்றைய தினம் அ.தி.மு.க, தி.மு.க என அனைத்து ஓட்டு கட்சியினரும் அங்கு வர இருந்ததால் பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.

trichy-mozhipor-day-10இதற்கு மத்தியில் மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர்களும் அதன் தோழமை அமைப்பு தோழர்களும் இணைந்து தியாகிகளின் வீரத்தை போற்றும் விதமாக பறையடித்தும்,முழக்கங்கள் இட்டும் ஊர்வலமாக தியாகிகளின் நினைவிடங்கள் நோக்கி பேரணியாக செல்லுகையில் காவல் துறையினர் “முழக்கம் போடக்கூடாது” என்று தடுத்து நிறுத்தினர். தோழர்கள், “எதற்கு முழக்கம் போடக் கூடாது, இரங்கல் கூட்டமா இங்கு நடக்கிறது? தியாகிகள் நினைவை போற்ற வேண்டுமென்றால் நாம் போர்குணத்தோடு அவர்களுக்கு மரியாதை செலுத்துவதே பொருத்தமானது” என தமது நியாயத்தை எடுத்து கூறியும் காவல்துறையினர் மறுக்கவே “உங்களால் முடிந்ததை பார்த்துகொள்ளுங்கள்” என கூறிவிட்டு நினைவிடம் நோக்கி முழக்கமிட்டவாறே தோழர்கள் சென்றனர்.

என்ன செய்வதென தெரியாமல் காவல்துறையினர் திகைத்தனர். பிறகு மொழிப்போர் தியாகிகள் சின்னசாமி மற்றும் விராலிமலை சண்முகம் அவர்களின் நினைவிடங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா மற்றும் மையக் கலைக்குழு தோழர் கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மற்ற ஓட்டுக்கட்சிகள் இரங்கல் கூட்டத்திற்க்கு வந்ததைபோல் மவுன ஊர்வலமாக வந்து சென்று கொண்டிருக்கையில் நாம் போர்க்குணத்தோடு சென்றது அனைவரையும் திகைக்க வைத்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க