Thursday, April 17, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்

விழுப்புரம் மாணவியர் தற்கொலையை கண்டித்து போராட்டம்

-

svs-students-suicide-rsyf-poster

S.V.S மருத்துவக் கல்லூரி உண்மை முகம் – தலைமைக் காவலர் மணிவண்ணன் நேர்காணல் !

S.V.S மருத்துவக் கல்லூரி உண்மை முகம் – முன்னாள் மாணவி வினோதினி நேர்காணல் !

S.V.S மருத்துவக் கல்லூரி உண்மை முகம் – மாணவர் அய்யப்பன் நேர்காணல் !

S.V.S மருத்துவக் கல்லூரி உண்மை முகம் – பெற்றோர் சார்பில் செல்வமணி நேர்காணல் !

S.V.S மருத்துவக் கல்லூரி உண்மை முகம் – வழக்குறைஞர் மில்டன் நேர்காணல் !

தஞ்சை

vilupuram-students-suicide-rsyf-1கல்லூரி மாணவர்கள் 3 பேர் (தற்)கொலை!
விழுப்புரம்-கள்ளக்குறிச்சி
SVS சித்த மருத்துவக் கல்லூரியில்
முறைகேடுகளை அம்பலப்படுத்திய
3 மாணவிகளை தற்கொலைக்குத் தூண்டிய கல்லூரி நிர்வாகம்.
இதுதான்… தரமான கல்வி என்று நமது
தாலியை அறிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின்
யோக்யதை!

தமிழக அரசே-மத்திய அரசே!

  • கொலைகார SVS கல்லூரிக்கு முறைகேடாக
    அனுமதி அளித்த சம்பந்தப்பட்ட மத்திய-மாநில அமைச்சர்கள்,
    அதிகாரிகள், SVS கல்லூரி உரிமையாளர் உட்பட
    கொலைகார கும்பலை உடனே கைது செய்!

உழைக்கும் மக்களே- பெற்றோர்களே!

  • அமைச்சர்கள் அதிகாரிகள் துணையோடு
    நாளைக்கு நம்ம பிள்ளைகளையும்
    தனியார் கல்வி வியாபாரிகள் நரபலி கொடுப்பதற்கு முன்
    சுதாரிப்போம்!
  • தனியார் கல்வி நிறுவனங்களைக் கைப்பற்றி
    அரசுடமையாக்க நிர்ப்பந்திப்போம்!

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம் – தஞ்சை
தொடர்புக்கு – 9443188285

கரூர்

vilupuram-students-suicide-rsyf-2விழுப்புரம் – கள்ளக்குறிச்சி SVS சித்தா மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிசா மரணம் மற்றும் அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை குறித்து 25-01-2016 மதியம் 1.30 மணிக்கு கரூர் அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து கண்டன போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் விழுப்புரம் கல்லூரியில் மூன்று மாணவிகளின் மரணத்திற்கு காரணமான கல்லூரி முதல்வர், கல்லூரி தாளாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்யக் கோரியும், மூன்று மாணவிகளின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரியும், அதோடு அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்கு காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்தின மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ஈரானி, ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த சுசீல் குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவி அபிநயா தலைமையில் 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

27-01-2016 அன்று காலை 8.30 மணிக்கு கரூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பு.மா.இ.மு கல்லூரி கிளையின் சார்பாக வகுப்புகளை புறக்கணித்து கண்டன போராட்டம் நடைபெற்றது.

  • மூன்று மாணவிகளின் மரணத்திற்கு காரணமான கல்லூரி முதல்வர், கல்லூரி தாளாளர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை கொலை வழக்கில் கைது செய்து தூக்கில் போட வேண்டும்.
  • அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசுடமையாக்கு.

என்ற முழக்கத்தின் அடிப்படையிலும்.

  • அய்தராபாத் மத்திய பல்கலைக் கழக தலித் மாணவர் ரோகித் வெமுலா மரணத்திற்குக் காரணமான துணைவேந்தர் அப்பாராவ், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த சுசில்குமார் ஆகியோரை கைது செய்து சிறையிலடைக்கக் கோரியும்
  • பா.ஜ.க, ஏ.பி.வி.பி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடை செய்யக் கோரியும்

போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு கல்லூரி கிளைச் செயலாளர் தோழர் சுதர்சனன் தலைமை ஏற்று நடத்தினார். போராட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கரூர்

விழுப்புரம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

vilupuram-students-suicide-rsyf-3

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க