Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்ஈழம்கருணாநிதியின் இறுதி நாடகம்?

கருணாநிதியின் இறுதி நாடகம்?

-

yiruthi-naadagam

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்)

(முகம் தெரியாத நண்பர் ரவி அவர்கள் நேற்று மின்அஞ்சலில் அனுப்பிய கருத்துப்படத்தை இங்கே நன்றியுடன் வெளியிடுகிறோம். )

அய்யகோ என ஈழத்திற்காகக் கதறுகிறார் கருணாநிதி. கதறிய கையோடு குடும்பக் குலக்கொழுந்துகளான கனிமொழிக்கும், கயல்விழிக்கும், தயாநிதிமாறனுக்கும், அழகிரிக்கும் கட்சியில் இளவரசுப் பட்டங்களை சூட்டி மகிழ்கிறார். தமிழகமெங்கும் கல்லூரி மாணவர்கள் ஈழத் தமிழர்கள் மீது கொலைவெறியாட்டம் போடும் சிங்கள இனவெறி அரசின் போரை நிறுத்துமாறு வகுப்புக்களை புறக்கணித்து போராடுகின்றனர்.பல கல்லூரிகளில் எமது தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாணவர்களை அணி திரட்டி போராடி வருகிறது. அப்படிப் போராடியதில் எமது அமைப்பைச் சேர்ந்த திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேரை கல்லூரியிலிருந்து நீக்கம் செய்திருக்கிறது கருணாநிதி அரசு. ஆயினும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து போராடுவோம்.

ஈழத்திற்காகக் கருணாநிதியின் இறுதி வேண்டுகோள் என்பது உண்மையில் நாடகம்தான், ஆனால் இறுதி நாடகமல்ல. இன்னும் பல்வேறு அடிமைத்தனங்களில் தொடரக்கூடிய நாடகம். மன்மோகனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடப்பதால் இந்திய அரசு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கிறது. இல்லாவிட்டாலும் ஷெல்லடியில் துண்டு துண்டாக சிதறும் ஈழத்தமிழனுக்காக இந்திய அரசு எப்போதும் ஒரு மயிறும் பிடுங்கப் போவதில்லை. தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் அனைத்தும் அடுத்த தேர்தலைக் குறி வைத்தே நாடகம் ஆடுகின்றன.

ஆனால் தமிழக மக்களாகிய நாம் இந்த கபட நாடகங்களை தோலுரித்து ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்கக் தொடர்ந்து போராடுவோம். நமது போராட்டத்தின் மூலம் இந்திய அரசை பணியவைப்பதற்கு தொடர்ந்து முயல்வோம். இந்தப் போராட்டத்தை எமது புரட்சிகர அமைப்புக்கள்  தொடர்ந்து நடத்தும் என ஆதரவற்றிருக்கும் ஈழத்தமிழ் மக்களிடம் உறுதி கூறுகிறோம். இது சர்வதேச பாட்டாளி வர்க்க உணர்வில், தமிழ் பேசும் மக்கள் என்ற உறவில், எமது அரசியல் திசை வழியில் செய்தே ஆகவேண்டிய கடமை. இந்தப் போராட்டம் தொடர்பான செய்திகளை வரும் நாட்களின் பதிவிடுகிறோம்.

நட்புடன்

வினவு