
கோவை உட்பட ஏழு பஞ்சாலைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்க தேர்தல் சென்ற 2010 டிசம்பர் -18 ஆம் தேதி நடந்தது. 30 ஆண்டுகளாக நடக்காமலிருந்த தேர்தலை, 2008 ஆம் ஆண்டு கோவை முருகன் மில்லில் துவங்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (இணைப்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி) பெரும் முயற்சியால் தான் நடத்த முடிந்தது.
இத்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க அனைத்து ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும், அவற்றின் தொழிற்சங்க முதலாளிகளும் முடிந்தளவு முட்டுக்கட்டை இட்டு தடுக்க முயன்றனர். இதை தொழிலாளிகளிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், உயர் நீதிமன்றம் மூலம் போராடி தொழிலாளர்களுக்கு இவ்வுரிமையை வெற்றிகரமாக பெற்றுத்தந்தது, கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம்.
தேர்தலில் வெற்றிபெற ஆளும் திமுக-வின் தொழிற்சங்கம் LPF ஏராளமாக செலவு செய்து முதல் இடத்தை வென்றது. “நக்சலைட்”என்று அனைத்து ஓட்டுக்கட்சிகளாலும் அச்சுறுத்தி பயங்காட்டப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம் இரண்டாம் இடத்தையும் “பாரம்பரிய”பெருமைகளை கூறி ஓட்டுக்கேட்ட CITU மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இதில் முதலடம் பிடித்த திமுகவிற்கும் இரண்டாம் இடம் வென்ற பு.ஜ.தொ.முவிற்கும் 120 வாக்குகள்தான் வேறுபாடு.

எனவே எல்லாவித அச்சுறுத்தல்களையும் தாண்டி தொழிலாளர்கள் “நக்சலைட்களை” ஆதரித்து, சரியானவர்களை இனம் கண்டு வாக்களித்துள்ளனர். இவ்வெற்றியை கொண்டாட கடந்த ஞாயிறு
(09 -01 11) மாலை கோவை பீளமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கம்பீரமாகத் துவங்கியது.
தோழர் விளைவை ராமசாமி தலைமை உரையாற்றி துவங்கி வைக்க புதிதாக துவங்க பட்ட பஞ்சாலை கிளைகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை ஒவ்வொருவராக பகிர்த்து கொண்டனர். கோவைத் தமிழில் தேர்தல் அனுபவங்களை விளக்கியதோடு, தற்போது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் திமுகவை பின்தள்ளி முதலிடத்தை நோக்கி விரைவதையும் பலத்த கை தட்டலுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.
பின் உயர் நீதி மன்ற வழக்கறிஞரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர் பார்த்தசாரதி இந்த தொழிற்சங்க தேர்தலுக்கான வழக்கு எப்படி நடந்தது, மற்ற கட்சிகள் என்னென்ன முட்டுக்கட்டைகளை நீதிமன்றம் மூலமாக செய்தனர், அதை எவ்வாறு பு ஜ தொ மு எதிர் கொண்டது போன்ற அனுபங்களை தொழிலாளர்களுக்கு விளக்கிப் பேசினார்.
இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரை ஆற்றினார். கடந்த கால துரோக சங்கங்களின் நோக்கங்களையும், தற்போதைய அவர்களின் செயல் தந்திரங்களையும் விளக்கிக் கூறினார். IT ஊழியர்களின் அவலங்களையும், தொழிலாளர்களின் வலிமை எத்தகையது என்பதையும், இன்றைய உலக அரசியல் நிலைமையுடன் ஒப்பிட்டு விளக்கி பேசினார். பின் இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவினரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.

இறுதியாக தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருவாரியாக தோழர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களுமாக 1500 பேர் வந்திருந்தனர். கூட்டம் முடிவடையும் வரை மக்கள் எழுந்து செல்லாமல் இருந்தனர் கோவையின் பீளமேடு பகுதியில் கடந்த காலங்களில் இப்படி ஒரு கூட்டம் எழுச்சியோடு நடந்தது இல்லை என்று பகுதிமக்கள் கூறினர். கூட்ட இறுதியில் கூட்டத்தில் வசூல் செய்த தோழர்களிடம் மக்கள் 7 ,200 ரூபாய் அளித்தது தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
கோவையில் ஐம்பதுகளில் இருந்த தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மரபு இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர். வர இருக்கும் நாட்களில் கோவையின் தொழிலாளர்கள் தமிழகத்திற்கே முன்னுதாரணமான வரலாற்றை கட்டியமைப்பது உறுதி.
– தகவல், புகைப்படங்கள்: பு.ஜ.தொ.மு, கோயம்புத்தூர்
______________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க
தொடர்புடைய பதிவுகள்
- ஓசூர் கமாஸ் தொழிலாளர்களின் மாபெரும் வெற்றி ! பொதுக்கூட்டம்!!
- பன்னாட்டு முதலாளிகளை வீழ்த்திய சென்னை தொழிலாளர்கள்!
- நோக்கியா 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி!
- அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
- தமிழகத்தின் போபால் நோக்கியா? – அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போட் !!
- நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
- நோக்கியா SEZ: தொடர்கிறது, பாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம் !!
- சத்யபாமா பல்கலைக்கழகம்: பாறையில் முளைத்த விதை, ஒரு தொழிற்சங்கம் உருவான கதை
- ஜெட் ஏர்வேஸ் விமானிகள் வேலைநிறுத்தம்: வென்றது தொழிற்சங்க உரிமை !!
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா !!
- இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !
- கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!
- வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை !
- உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம்!!
- “சினிமா கழிசடை தமன்னா விளம்பரத்துக்குப் பல கோடி! உரிமைகளைக் கேட்கும் தொழிலாளருக்குத் தடியடி!”
- அரசின் பென்சன் மோசடியும், போக்குவரத்து தொழிலாளிகளின் அவலமும் !!
- கூலித்தொழிலாளர்களைக் கொன்றது சுடுநெருப்பா? இலாப வெறியா?
- கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!