செய்தி-48
ஆவணி மூலத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தர திருக்கோவிலில் “பிட்டுக்கு மண் சுமந்தத லீலை” நடைபெறுகிறதாம். அதன்படி இந்தக் கதையை பார்ப்பன பட்டர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர். பிட்டுக்கு மண் சுமந்த கதை என்ன?
இது புராண காலத்தில் நடந்த கதை. அதாவது சோதித்தறியப்பட்ட அறிவியல் விளக்கத்துடன் அறியப்படும் வரலாற்றுக் காலம் அல்ல இது. பார்ப்பனியத்தின் புரட்டுக் காலம்தான் புராண காலம். இனி கதை.
வைகையாற்றில் வெள்ளம் கரை புரண்டோடிய நேரம். அதனால் ஆற்றின் கரையை அடைக்க வீட்டுக்கு ஒருவர் வரவேண்டும் என அரசர் ஆணையிட சிவபக்தையான பிட்டு விற்கும் வந்தியக் கிழவி தனக்கு ஆள் இல்லையே என வருத்தமடைந்தாள்.
இதையடுத்து இறைவனே கூலி ஆளாக வந்து, பிட்டு தந்தால் மண் சுமப்பதாகக் கூறி வந்தியக்கிழவி சார்பில் கூலியாளாக சென்றார். ஆனால், சரிவர வேலைசெய்யாமல் அங்கு கூலியாள் தூங்குவதைக் கண்ட அரசன், பிரம்பால் கூலியாளை முதுகில் அடித்தார்.
அப்போது அரசர் உள்ளிட்ட அனைவருக்கும் முதுகில் பிரம்படிபட்டது போல வலித்தது. இதன் பிறகே, கூலியாளாக வந்தவர் இறைவன் என்பதை உணர்ந்த அரசர் இறைவனை வணங்கினார். அப்போது, வந்தியக்கிழவியை வாழ்த்திய இறைவன், மாணிக்கவாசகர் பெருமையையும் கூறி அருளியதாக புராணம். (தினமணி செய்தி)

இந்தக் கதையின் படி அரசராகவும், இறைவனாகவும் இரு பார்ப்பனப் பட்டர்கள் நடித்து சடங்கு செய்திருக்கின்றனர். அந்தக் காலத்து இறைவனை விட இந்தக் காலத்து இறைவன் காஸ்ட்டிலியாக வாழ்வதால் மண் கூடை, மண்வெட்டி இரண்டுமே தங்கமாம். தங்கள் வாழ்நாளில் இது போன்ற விவசாயக் கருவிகளை ஏறெடுத்தும் பார்க்காத பார்ப்பன பட்டர்கள் லீலை சடங்கிற்காக இவற்றை எடுத்திருக்கின்றனர். போகட்டும். நாம் சொல்ல வந்த விசயம் வேறு.
ஏழைக் கிழவிக்கு உதவ வந்த இறைவன் அதை யாருமறியாமல் செய்து முடித்து விட்டு போகவில்லை, ஏன்? தனது உதவி எல்லார் முதுகிலும் விழுந்த அடியாக உணரப்பட்டு, பாடப்பட்டு, இன்று தங்க மண்வெட்டி வரைக்கும் வந்து ‘வரலாறாக’ ஊர் உலகம் மெச்ச வேண்டும் என்று ஏன் நினைத்தார்?
இன்றும் கூட விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற தலைவர்கள் தமது பிறந்த நாட்களில் ஏழைகளுக்கென்று ஏராளம் உதவிகள் செய்து மறக்காமல் போட்டோ எடுத்து ஊடகங்களில் வருமாறு பார்த்துக் கொள்கின்றனர். இவர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன வேறுபாடு? கடவுள் இமேஜூக்காக செய்யவில்லை என்று சொன்னால் அது வரலாற்றில் பதியப்பட்டிருக்க கூடாது.
கடவுள் இமேஜுக்காக தனது லீலையை ரிக்கார்டு செய்தார் என்றால் விஜயகாந்தையும் கடவுள் என்று அழைக்கலாம். என்ன தவறு? அடுத்து கர்மவிதிப்படி பார்த்தாலும் இது தவறு என்பதை விளக்கலாம். வந்தியக் கிழவி போன ஜன்மத்தில் பாவம் செய்தவள் என்பதால்தான் பிட்டு விற்று பிழைத்து வந்தவள். அதனால் அவள் கஷ்டப்படும்போது கடவுள் வந்து காப்பாற்றுகிறார் என்றால் கடவுள் தான் வரைந்த கர்மவிதிச் சட்டத்தை மீறுவதாக அர்த்தம். ஏனெனில் இந்த ஜன்மத்தில் வந்தியக் கிழவியின் நற்பயன்கள் போஸ்ட் பெய்டாக அடுத்த ஜன்மத்தில்தான் கிடைக்க வேண்டும். பிரிபெய்டாக இப்போதே கொடுத்தால் இந்த கர்மவிதி ப்ளானே தப்பு என்றாகிவிடும்.
கர்மவிதியை மீறி கடவுள் உதவ வந்தார் என்றால் அவர் ஏன் ஏழைகளை எண்ணிறந்த எண்ணிக்கையில் படைக்க வேண்டும்? எல்லோரையும் அம்பானி, மிட்டல், ஜின்டால் போன்று படைக்கலாமே? அப்படிப் படைப்பதற்கு காசா, பணமா? எல்லாம் ஒரு குரூப் எஸ்.எம்.எஸ் அனுப்பினால் விதியை மாற்றலாமே?
எம்.ஜி.ஆர் கட்டிப்பிடிக்காத கிழவிகளா? ராகுல்காந்தி போகாத குடிசைகளா? தெரசா உதவாத ஏழைகளா? இப்படி வரலாறு முழுவதும் மேன்மக்கள் தங்களை இரக்கமிக்கவர்களாக காட்டிக் கொண்டுதான் வருகிறார்கள். ஒருவேளை இவர்களது கருணையை உலகம் அறியவேண்டுமென்பதற்காகவே இந்த உலகில் ஏழைகள் இருந்தாக வேண்டும்.
கனம் கோர்ட்டார் அவர்களே கடவுள் இல்லை என்பதை இன்னுமா விளக்க வேண்டும்?
இதையும் படிக்கலாம்
______________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா?
- சாமியே ஐயப்பா மகர ஜோதி பொய்யப்பா !
- செயற்கை உயிர்: பழைய கடவுள் காலி! புதிய கடவுளர் யார்?
- கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள் !
- யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?
- சமயபுரம் மாரியாத்தா ! இந்த பிராடு வேலை எதுக்காத்தா?
- நெரிசல் பலிகளை நிறுத்த முடியாத கடவுள்! பக்தர்கள் சிந்திப்பார்களா?