Saturday, April 19, 2025
முகப்புஅரசியல்ஊடகம்குமுதம் வி.ஐ.பி - வினவு கமெண்ட்ஸ்!

குமுதம் வி.ஐ.பி – வினவு கமெண்ட்ஸ்!

-

செய்தி-55

பிரபலங்கள் ஏப்பம் விட்ட கதைகளையே செய்திகளாக உருவாக்கும் நோயில் குமுதம்தான் குரு. வி.ஐ.பி விஷயங்கள் என்ற பெயரில் இந்த வாரக் குமுதம் வெளியிட்டிருக்கும் சமாச்சாரங்களை முடிந்த மட்டும் கும்முவோம். மெல்லிய வரிகள் குமுதத்துடையவை, கனத்த நீல நிற வரிகள் நம்முடையவை!

_______________

* “இலியானா ‘ராக்’ பாடல்களின் தீவிர ரசிகை. நம்பர் 1 ஹீரோயினாக இருந்தாலும், ஒரு பாடகி ஆகமுடியவில்லையே என அடிக்கடி வருத்தப்படுவார். சொந்தமாக ஒரு ராக் பாண்ட் அமைக்க வேண்டும் என்பது இலியின் வாழ்நாள் லட்சியங்களில் ஒன்று!”

# டாக்டர், ஐஏஎஸ் ஆவேனெல்லாம் பழைய ட்ரண்ட் போலும். இந்த திரையுலகத் தாரகைகள், “நகர சுத்தி தொழிலாளியாவதுதான் கனவு, சலவைத் தொழில் நடத்துவது இலட்சியம்” என்று ஏன் பேசுவதில்லை? அப்படி பேசவைக்க என்ன செய்ய வேண்டும்?

_______________

* “வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மும்பையில் கிடைக்கும் சின்ன சைஸ் விநாயகர் சிலைகளைக் கொடுப்பது கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராமின் வழக்கம்”.

# அப்படியே விநாயகர் ஊர்வலத்தை அரசியலுக்குள் கொண்டு வந்த திலகரின் பார்ப்பனியத்தையும், விநாயகர் ஊர்வலத்தை வைத்து சிவசேனா நடத்திய கலவரங்களையும் இலவச வெளியீடாக கொடுத்தால் பக்தி துறந்து புத்தி பெறலாம்.

________________

* சென்னை மேயர் சைதை துரைசாமி காலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு வரும்போது, அவர் கூடவே ஒரு கேன் நிறைய கருப்பட்டி காபியும் வந்திறங்கும். தன்னிடம் மனுகொடுக்க வருபவர்களுக்கு கருப்பட்டி மணம் கமழ காபி கொடுத்து உபசரித்துவிட்டுத்தான் பேசத் தொடங்குவார்.

# கூடவே ஒருடம்ளர் கொசுவும், அரை அவுன்சு காலராவும் கொடுக்கலாமே! அவைதானே சென்னை மாநகராட்சி தயவால் ஊர் முழுவதும் நாறிக் கிடக்கிறது! அல்வா கொடுத்து ஏமாற்றுவதை விட கருப்பட்டி காப்பி மலிவுதானே!

_______________

* மெக்ஸிகன் மற்றும் தாய்லாந்து உணவுகள் என்றால் நடிகர் கார்த்திக்கு மிகவும் பிடிக்கும். அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட ரெஸ்ட்ரெண்டில் கிடைக்கும் இவ்வகை உணவுகளின் ருசி வேறெங்கும் வராது என்று நண்பர்களிடம் ரசித்துச் சொல்வார்.

# இதுவே இளவரசர் ஹாரியாக இருந்தால் பிகினி, நியூடு பிடிக்கும் என்றிருக்கும். தமிழ் சினிமா நடிகர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை எல்லாமும் வெளியே சொல்ல மாட்டார்கள். அந்த அளவு கட்டுப்பெட்டி தேசமாக இருக்கையில் இந்த நிழல் நட்சத்திரங்கள் என்ன செய்வார்கள்? இருட்டு நியூஸ் கிசுகிசுவில் மட்டும் வரும், வெளிச்ச நியூஸ்ங்கிறது இந்த ஊறுகாய் உணவு ஐட்டங்கள்தான்.

_________________

* செல்போன் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டாலே மக்கள் அதைப் பழசாகக் கருதும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். எளிமைக்குப் பேர்போன கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவாரா என்ன? முதன்முதலாக வாங்கிய நோக்கியா 1100 பேஸிக் மாடல் செல்போன்தான் நல்லகண்ணுவின் கழுத்தில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

# இந்த பழையை மாடல் போனில்தான் ஐயா நல்லக்கண்ணு புரட்சித் தலைவியிடம் பழைய அடிமைத்தனம் மறக்காமல் இன்னும் பவ்யமாக பேசுகிறாராம். போனு பழசா இருந்தா என்ன, புதுசா இருந்தா என்ன? அதுல என்ன பேசுராறுன்னு பாருங்கய்யா வெண்ணெய்களா!    

______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: