Wednesday, April 23, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்பஸகுடா என்கவுண்டர் - சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் - வீடியோ!

பஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ!

-

செய்தி -96

ந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் அறிமுக உரையை இங்கே தருகிறோம்:

த்திஸ்கர் மாநிலத்தின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஜூன் 28, 2012 இரவில் சிஆர்பிஎப் படையினரால் 17 பழங்குடி மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் கூட்டுமைப்பின்அகில இந்திய உண்மை அறியும் குழு சென்றது.

அந்த குழு சர்கேகுடா, கோட்டாகுடா, ராஜ்பென்டா கிராமங்களுக்கு ஜூலை 6,7 தேதிகளில் சென்று சம்பவம் பற்றிய தகவல்களை திரட்டியது.

இந்த மூன்று கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 பழங்குடியினர் சர்கேகுடாவுக்கும் கோட்டாகுடாவுக்கும் நடுவில் இருக்கும் திறந்த வெளியில் ஜூன் 28 இரவு 8 மணியிலிருந்து ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர். பகல் நேரங்களில் வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் கூட்டு முடிவுகளை எடுப்பதற்கான இத்தகைய கூட்டங்கள் வழக்கமாக இரவு நேரத்திலேயே கூட்டப்படுகின்றன.

கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் கோப்ரா (உறுதியான நடவடிக்கைக்கான தாக்குதல் பிரிவு –  நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சிறப்பு சிஆர்பிஎப் படை) வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தாக்குதல் படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். “சுமார் 10 மணியளவில் எந்த எச்சரிக்கையும் இல்லாமல் துப்பாக்கிச் சூடு ஆரம்பித்தது” என்கின்றனர் கிராம மக்கள்.

“எந்த வித ஆயுதங்களையும் வைத்திருக்காத, அமைதியாக கூடியிருந்த பழங்குடி மக்களின் கூட்டத்தை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் சூழ்ந்து கொண்டு எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் கண்மூடித்தனமாக சுட்டிருக்கின்றனர்” என்பது உண்மை அறியும் குழுவுக்கு தெளிவாக புரிந்தது. அந்த துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 17 பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

சட்டீஸ்கர்-படுகொலை
மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பழங்குடியினச் சிறுவர்கள்

அந்த இரவில் சர்கேகுடாவுக்கு அருகில் நடந்தது தெளிவான ஒரு படுகொலை.

எல்லாவற்றையும் கேட்ட பிறகு கடைசியில் நாங்கள் அந்த கிராமங்களையும் கிராம மக்களையும் கொலைகார படைகள் மத்தியில் விட்டு விட்டு வந்தோம். பஸகுடாவில் மட்டுமில்லை, மத்திய இந்தியாவில் இருக்கும் பல கிராமங்களை இந்த கொலைகாரப் படைகள் சூழ்ந்திருக்கின்றன. கொலை செய்வதற்கான தெளிவான கட்டளையுடன் இந்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்திய அரசின் நடவடிக்கைகளை அனைத்து தரப்பினரும் கண்டனம் செய்ய வேண்டும்.

___________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________

_______________________________________

_______________________________________