Monday, April 21, 2025
முகப்புசெய்திகூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!

கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!

-

செய்தி -102

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டம்

10.9.2012 காலை 1015

கடற்கரையில் காலையிலிருந்தே  போலீசு குவிக்கப்பட்டு விட்டது.

“நீங்கள் சட்டவிரோதமாக கூடியிருக்கிறீர்கள். இது தடை செய்யப்பட்ட பகுதி. கலைந்து செல்லுங்கள். இல்லையேல் கண்ணீர் புகை குண்டு வீசுவோம்” என்று எழுதிய சிவப்பு பானர் ஒன்றை மக்களுக்கு முன்னால் காட்டியது போலீசு.

ஏற்கெனவே கூட்டதுத்துக்கு உள்ளே ஊடுறுவியிருந்த அதிரடிப்டையினர் மக்களை தாக்கத் தொடங்கினர். மக்கள் பின்னோக்கிப் போக மறுத்ததால் போலீசு மேலும் தீவிரமாக பிடித்து தள்ளத்தொடங்கியது. இந்த தாக்குதலில் பலரது சட்டைகள் கிழிந்து, மார்பில் தாக்கப்பட்டு விழுந்தனர். தாக்கப்பட்ட பெண்கள் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

யாரும் பின்வாங்கவில்லை.

போலீசு பின்னோக்கி தள்ளப்பட்டு விட்டது.

“நீங்களும் மனிதர்கள் என்பதனால்தான் பார்க்கிறோம். தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதால் எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இனி எங்கள் மேல் கைவைத்தால் நடப்பது வேறு” என்று எச்சரிக்கிறார்கள் மக்கள்.

படகில் வந்து இறங்கும் மக்கள் போராட்டத்தின் தலைப்பகுதிக்கு, போலீசு நிற்கும் இடத்துக்கு வந்து இறங்குகிறார்கள்.

இங்கே அஞ்சுவதற்கோ ஓடுவதற்கோ யாரும் இல்லை.

ஒரு பெரும் ரத்தக் களரியை நடத்துவதற்குத் தயாராக போலீசு வந்திருப்பதாகவே தெரிகிறது.

கூடங்குளம் மக்கள் மீது அரசு நடத்தும் இந்த ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக குரல் எழுப்புங்கள்.

போலீசு உடனே வெளியேறவேண்டும் என்று போராடுங்கள்

அணு உலையை மூடு என்று முழங்குங்கள்!

________________________________________________________________

வினவு செய்தியாளர்கள், கூடங்குளம் கடற்கரையிலிருந்து

________________________________________________________________

தொடர்புடைய பதிவுகள்: