Monday, April 21, 2025
முகப்புசெய்திஉதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!

உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!

-

கூடங்குளம்-இடிந்தகரை-போராட்டக்-காட்சிகள்-15

கைதாவதற்குத்-தயார்-உதயகுமார்
உதயகுமார்

மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.

இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.

மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.

ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.

இந்த மான உணர்ச்சி தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்!
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: