Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!

கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !!

-

மிழகமெங்கும் கூடங்குளம் பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அரசு அடக்குமுறைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ள சூழலில், இடிந்தகரையில் நேற்று முன் தினம் தொடங்கிய இரண்டு நாள் உண்ணாநிலைப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்தது. தமிழகமெங்கும் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவான குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள இந்த சூழலில், தங்களது அடுத்த கட்ட போராட்டத்தை இடிந்தகரை மக்கள் அறிவித்திருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலையில் யுரேனியத்தை நிரப்பக்கூடாது, பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து, காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரையில், நாளை முதல் கடலுக்குள் கை கோர்த்து நின்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு சற்று நேரத்துக்கு முன் அறிவித்திருக்கிறது. யுரேனியத்தை நிரப்பமாட்டோம் என்று அரசு அறிவிக்கும் வரையில் இந்தப் போராட்டம் அன்றாடம் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரு நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையினால் மக்கள் அஞ்சிப் பின்வாங்கிவிடுவர், அல்லது சிதறி ஓடி ஒளிந்து விடுவர் என்று ஜெ அரசும், போலீசும் எண்ணியிருக்கக் கூடும். அந்த எண்ணத்தில் மண்ணை எறிந்திருக்கிறார்கள் மக்கள்.

போராடும் மக்களை மீண்டும் ஒன்று திரட்டி நிறுத்தும் முயற்சி இது. அடக்குமுறைக்கு பணியமாட்டோம் என்ற பிரகடனம் இது.

மக்களின் மன உறுதி வெல்லட்டும். போராட்டம் வெல்லட்டும். போராட்டம் பற்றிப் பரவட்டும்.

_______________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: