Monday, April 21, 2025
முகப்புசெய்திஇடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!

இடிந்தகரை மக்களுடன் கரம் கோர்ப்போம்!

-

“கூடங்குளம் அணுஉலையில் யுரேனியத்தை நிரப்பக்கூடாது, பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்து, இன்று காலை பத்து மணி முதல் மாலை 4 மணி வரையில், நாளை முதல் கடலுக்குள் கை கோர்த்து நின்று மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழு அறிவித்திருக்கிறது. “யுரேனியத்தை நிரப்பமாட்டோம்” என்று அரசு அறிவிக்கும் வரையில் இந்தப் போராட்டம் தினந்தோறும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அம்மக்களுக்கு காலம் காலமாக வாழ்வளிக்கும் அந்தக் கடலில்,

எந்தக் கடலின் நீரையும் மீனையும் கதிரியக்கத்தின் வெம்மையிலிருந்து பாதுகாப்பதற்காக போராடுகிறார்களோ அந்தக் கடலில்,

தாய்மடியாய் இருந்து போலீசின் வெறித்தாக்குதலிலிருந்து அம்மக்களைப் பாதுகாத்த அந்தக் கடலில் – – – – –

குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உள்ளிட்ட கரையோர மக்கள் ஆயிரக்கணக்கில் இறங்கி நிற்கப்போகிறார்கள் – நீதி கேட்டு.

இந்தக் கடல், அதன் காற்று, அதன் மணல், அந்த மீன்வளம் ஆகியவற்றை நுகரும் தமிழக மக்களாகிய நமக்கு ஒரு கடமை உண்டு. கதிரியக்கம் தாக்கினால் பாதிக்கப்படப்போவது கூடங்குளம் இடிந்தகரை மக்கள் மட்டுமல்ல.

அது ராமேசுவரத்தில் புனித நீராட வரும் பக்தர்கள் முதல், மெரினாவில் காற்று வாங்க வரும் சென்னை மக்கள் வரை அனைவரையும் தாக்கும். மாநில எல்லை கடந்த கேரள மக்களைத் தாக்கும். தேச எல்லை கடந்து இலங்கையையும் தாக்கும்.

இது நமது கடல். நமது போராட்டம்.

இடிந்த கரை மக்கள் அறிவித்திருக்கும் இந்தப் போராட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தன் கரையோர மக்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை ஓரம் கை கோர்த்து நிற்க  வேண்டும் என்று அறை கூவுகிறோம்.

______________________________________________________

அ.முகுந்தன், ஒருங்கிணைப்பாளர், போராட்டக்குழு,

ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. பெ.வி.மு

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: