Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.க1 வயது குழந்தைக்கு சிறை - திருச்சி போலீசின் 'தாயுள்ளம்'!

1 வயது குழந்தைக்கு சிறை – திருச்சி போலீசின் ‘தாயுள்ளம்’!

-

நேற்று சீரங்கம் கோயிலில் அன்னதானம் செய்ய வந்த அம்மாவுக்கு கருப்புக் கொடி காட்டி, அதிமுக காலிகளால் தாக்கப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். மாஜிஸ்திரேட் காயத்தை பதிவு செய்து கொண்டார். ஆனால் காயத்துக்கு காரணமானவர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று போலீசை கேட்டதாகத் தெரியவில்லை. அதெற்கெல்லாம் பி.ஆர்.பி யாகப் பிறக்க வேண்டும்.

நேற்று கைது செய்யப்பட்டிருப்பவர்களில் 11 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், 3 குழந்தைகள். சிறுவர்கள் அல்ல குழந்தைகள்.

இளமாறன் –வயது 3, சிந்தனை -வயது 2, அஜிதா –வயது 1 . இந்த மூவரும் இப்போது திருச்சி மத்திய சிறையில்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 143, 153, 188, 189, 190, 353, 500, 501, 504, 506(1) ஆகிய பிரிவுகளில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது போலீசு.

கூடங்குளம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்டிருக்கும் மக்களை, பாளையங்கோட்டை சிறையில் வைத்தால் சொந்த பந்தங்கள் வந்து பார்த்து விடக்கூடுமே என்பதனால், அதைத் தடுப்பதற்காக, அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பியது நெல்லை போலீசு. இப்போது 3 குழந்தைகள் உட்பட 21 பேரை திருச்சி சிறைக்கு அனுப்பி அம்மக்களின் வாட்டத்தைப் போக்கி விட்டது திருச்சி போலீசு.

அம்மாவுக்கே தெரியாமல் போலீசாரின் உள்ளத்தில் புகுந்து வேலை செய்கிறது அம்மாவின் தாயுள்ளம் – அடேங்கப்பா!

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: