Monday, April 21, 2025
முகப்புசெய்திசகாயத்தின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது- தடுக்கிறது போலீசு!

சகாயத்தின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்லக்கூடாது- தடுக்கிறது போலீசு!

-

பிரேத பரிசோதனை இன்று காலை முடிந்துவிட்டது. மீனவர் சகாயத்தின் உடலை மக்கள் அஞ்சலி  செலுத்தும் பொருட்டு கடலோர கிராமங்கள் வழியே கொண்டு செல்ல வேண்டும் என்பது மக்கள் விருப்பம். ஆனால் டி.ஐ.ஜி தலைமையில் நாகர் கோயில் மருத்துவமனை வாயிலில் பெரும் போலீசு படை குவிக்கப் பட்டிருக்கிறது. கண்ணீர் புகை குண்டுகள், தடிகளுடன் நூற்றுக்கணக்கான போலீசார் தயார் நிலையில் இருக்கிறார்கள். ஊர்வலமாக கொண்டு செல்வதை தடுக்க மூர்க்கமாக நிற்கிறது போலீசு. மாவட்ட ஆட்சியரை அழைத்திருப்பதாகவும் அவர் முடிவு எடுக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கிறார்கள், நாகர்கோயில் மருத்துவமனையில் இருக்கும் மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள்.

ஊர்வலமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை முறியடிக்கும் வகையில் இரண்டு நாட்களாக வேண்டுமென்றே சவப்பரிசோதனையை இழுத்தடித்துவிட்டு, இன்று பெருமளவில் அதிரடிப்படையைக் குவித்து, மக்களின் அஞ்சலி செலுத்தும் உரிமையையும் பறிக்கிறது போலீசு.

அந்த போலீசு அராஜகத்துக்கு எதிராக குரல் கொடுக்க கோருகிறோம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க