Monday, April 21, 2025
முகப்புசெய்திசகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

சகாயத்தின் இறுதி ஊர்வலத்தை தடுக்காதே! ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

-

சகாயம்
சகாயம், சடலமாக

சகாயத்தின் உடலை ஊர்வலமாக கொண்டு செல்வோம் என்று இடிந்தகரை பெண்களும், மீனவ இளைஞர்களும், ம.உ.பா மைய வழக்குரைஞர்களும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊர்வலமாக கொண்டு சென்றால் வழியில் அணு உலை ஆதரவாளர்கள் தாக்கக் கூடும் என்றும், அதிலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் ஊர்வலம் வேண்டாம் என்று கூறுவதாகவும் அறிவுரை கூறுகிறார்கள் போலீசு அதிகாரிகள்.

தங்கள் அறிவுரையை கேட்க மறுத்தால், கண்ணீர் புகை குண்டுகள் மூலம் வேறு விதமான அறிவுரையை அவர்கள் தொடங்க கூடும். போலீசின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல் கீழ்க்கண்ட பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

கடலோரக் காவற்படை விமானத்தால் கொல்லப்பட்ட
மீனவர் சகாயத்துக்கு அஞ்சலி!

கடற்படை விமான அதிகாரிகளை
கொலை வழக்கில் கைது செய்!

அணு உலை இருக்கும் வரை
மீனவர் படுகொலை தொடரும்!
கடற்படை மிரட்டலை முறியடிப்போம்!
அணு உலையை மூடுவோம்!

தமிழக மீனவர்ளை வேட்டையாட
அந்தப் பக்கம் – சிங்கள இராணுவம்!
இந்தப் பக்கம் – இந்தியக் கடற்படை!

அமைதியாகப் போராடிய மக்கள் மீது விமானத்தை பறக்கவிட்டு, அநீதியான முறையில் ஒரு மீனவரைக் கொன்ற அரசு, இப்போது அவரது உடலைக் கண்டும் அஞ்சுகிறது.

அணு உலைக்கு எதிரான போராட்டத்தினை இறந்த பின்னரும் முன்னெடுத்துச் செல்கிறார் சகாயம். போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: