Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!

-

மாருதி-ரிப்போர்ட்-3

முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப்

புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்!

மாருதி-ரிப்போர்ட்-1திரண்டெழுந்தனர் மாருதி தொழிலாளர்கள் தீக்கிரையானது முதலாளித்துவ பயங்கரவாதம்! எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?’- என்ற மைய முழக்கத்துடன், தீவிரமாகிவரும் முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தை நடத்திவரும் ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளையும் பொதுக்கூட்டங்களையும் கடந்த ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் நடத்தின.

25.8.2012 சென்னை – திருவொற்றியூர் பெரியார் நகரிலுள்ள பொது வர்த்தகர் சங்கக் கட்டிடத்தில் பு.ஜ.தொ.மு. மாநில இணைச் செயலர் தோழர் சுதேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் தீவிரமாகிவரும் முதலாளித்துவப் பயங்கரவாதத்தை வீழ்த்த தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தினர். தொழிலாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்ற இக்கருத்தரங்கில் திருவள்ளூர் மாவட்ட பு.ஜ.தொ.மு. பிரச்சாரக் குழுவின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ஓசூரில்,  பாகலூர் சாலையிலுள்ள சங்கீத் அரங்கில் 26.8.2012 அன்று பு.ஜ.தொ.மு. கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமையில் நடந்த கருத்தரங்கில்,பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன், கர்நாடக உயர் நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர்,  மாருதி தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டத்தை வன்முறை என்று சித்தரித்து, நாடு தழுவிய அளவில் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் ஒடுக்கத் துடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தி சிறப்புரையாற்றினர்.  திரளான தொழிலாளர்கள் கலந்துக் கொண்ட இக்கருத்தரங்கில்இடையிடையே புரட்சிகர பாடல்கள் இசைக்கப்பட்டன.

கோவையில் 26.8.2012 அன்று பாரதி நகரிலுள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பு.ஜ.தொ.மு. கோவை மாவட்டச் செயலர் தோழர் விளவை இராமசாமி தலைமையில் நடந்த கருத்தரங்கில், ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, பு.ஜ.தொ.மு. மாநில அமைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ம.க. இ.க. தோழர்கள் வர்க்க உணர்வூட்டும் பாடல்களை இசைத்தனர்.

மாருதி-ரிப்போர்ட்-1திருச்சி – திருவெறும்பூர் யூனியன் அலுவலகம் முன்பாக 26.8.2012 அன்று பு.ஜ.தொ.மு. சார்பில் அதன் இணைப்புச் சங்கங்களான பாலர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம் ஆகியன இணைந்து பொதுக்கூட்டத்தை நடத்தின.பாலர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் துணைச் செயலாளர் தோழர் சுந்தரராஜன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சுப.தங்கராசு சிறப்புரையாற்றினார். முதலாளித்துவப் பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டிய ம.க. இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி, பார்வையாளர்களிடம் போராட்ட உணர்வூட்டியது.

இக்கருத்தரங்குகள் மற்றும் பொதுக்கூட்டத்தில், தொழிற்சங்க சட்டத்தை மதிக்காததோடு தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் வன்முறையாளர்களாகச் சித்தரித்து அவதூறு செது தடைசெய முயற்சித்துவரும் சி.ஐ.ஐ. (இஐஐ), ஈ.எஃப்.எஸ்.ஐ.(உஊகுஐ), ஃ பிக்கி (ஊஐஇஇஐ) முதலான முதலாளிகளின் சங்கங்களைத் தடை செய வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

சென்னையில்30.8.2012 அன்று பெண்கள் விடுதலை முன்னணியினர் பல்லாவரம் – நாகல்கேணி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தெருமுனைக் கூட்டத்தை நடத்தினர். தோழர் ராஜி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன், மாருதி தொழிலாளர்கள் மீது மட்டுமின்றி, அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்கள் மீது முதலாளித்துவம் ஏவிவரும் வன்முறையையும், இப்பகுதியில் நீண்டகாலமாக கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலை நஞ்சாக்கி மக்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் தோல் தொழிற்சாலை முதலாளிகளின் பயங்கரவாதத்தையும் விளக்கி, இவற்றுக்கெதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு போராட அறைகூவினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் 8.9.2012 அன்று வி.வி.மு. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தோழர் ஆசை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், உசிலை வட்ட வி.வி.மு. செயலாளர் தோழர் குருசாமி, ம.உ.பா.மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு ஆகியோர்,  யார் பயங்கரவாதி, யார் போராளி, எது வன்முறை என்பதை விளக்கி சிறப்புரையாற்றினர். இப்பகுதியில் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் அடாவடி அட்டூழியங்களால் புழுங்கிக் கொண்டிருந்த ஆட்டோ, வேன் ஓட்டுநர்களும் சிறு வியாபாரிகளும் பெருமளவில் அணிதிரண்டு ஆதரித்த இக்கூட்டத்தில், ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும், கும்மிருட்டு … ஜெயலலிதாவைப் போட்டு உருட்டு என்ற பாடலும் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

16.9.2012 அன்று தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகே பென்னாகரம் வி.வி.மு. தோழர் சிவா தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில், வி.வி.மு. வட்டச் செயலர் தோழர் கோபிநாத், ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிரானைட் கொள்ளையன் பி.ஆர்.பி.யின் பயங்கரவாதம் முதல் கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கும் போலீசின் பயங்கரவாதத்தைத் திரைகிழித்தும், தொழிலாளர்களின் சம்பளத்தை மட்டுமின்றி நமது வரிப்பணத்தையும் பொதுச் சோத்துக்களையும் விழுங்கி முதலாளிகள்  பல கோடிகளைச் சுருட்டியதையும், வன்முறை, கதவடைப்பு, வரிஏப்பு, கூலிப்படைகளைக் கொண்டு தாக்குவது – என முதலாளித்துவ பயங்கரவாதம் தலைவிரித்தாடுவதை அம்பலப்படுத்தியும் போராட அறைகூவினர். ம.க. இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் நடந்த இப்பொதுக்கூட்டம், இப்பகுதிவாழ் உழைக்கும் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

மாருதி-ரிப்போர்ட்-2சிவகங்கை – அரண்மனை வாயில் பகத்சிங் அரங்கில் பு.ஜ.தொ.மு. 20.9.2012 அன்று பொதுக்கூட்டத்தை நடத்தியது. சிவகங்கை – இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு. அமைப்பாளர் தோழர் நாகராசன், ம.க.இ.க. கவிஞர் தோழர் துரை.சண்முகம் ஆகியோர் தமது சிறப்புரையில், கல்வி  மருத்துவம், விவசாயம், உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதலாளிகள் நடத்தும் கொடூரமான வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தோலுரித்துக் காட்டினர். ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியானது, முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் போராட அறைகூவியது.

ம.க.இ.க. வேலூர் கிளையின் சார்பில், தோல் தொழிற்சாலைகள் நிறைந்த ஆம்பூரில் 22.9.2012 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இப்பகுதியில், அற்பக் கூலிக்குத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உழல்வதையும், மரத்தடி மகாராஜாக்கள்” எனப்படும் தொழிற்சங்க புரோக்கர்களின் துரோகத்தையும் விளக்கி, எந்த தொழிற்சங்கத்தை தென்னிந்திய முதலாளிகள் சங்கம் தடை செயக் கோருகிறதோ அந்த பு.ஜ.தொ.மு. சங்கத்தைக் கட்டியமைத்து போராடாமல் தொழிலாளிகளுக்கு விடிவில்லை என்பதை  தலைமையுரையாற்றிய மாவட்ட ம.க.இ.க. செயலர் தோழர் இராவணனும், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமாரும் உணர்த்தினர். இக்கருத்தரங்கமும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியும் ஆம்பூரில் ஓர் புரட்சிகர தொழிற்சங்கத்தைக் கட்டியமைக்க அடித்தளமிடுவதாக அமைந்தது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், அக்டோபர் – 2012
__________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க