Sunday, April 27, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

தருமபுரி தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்!

-

தரும்புரி-ஆர்பாட்டம்

தமிழக அரசே !

*நத்தம், அண்ணா நகர், கொண்டாம்பட்டியில் மக்களின் அழிக்கப்பட்ட வாழ்க்கையை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடு !

*ஆதிக்க சாதிவெறியர்களால் நடத்தப்பட்ட உடைமைகள் அழிப்பு, பணம், நகை கொள்ளை மற்றும் காவல்துறையின் கையாலாகாத்தனத்தையும் விசாரிக்க சி.பி.ஐ க்கு உத்தரவிடு!

*சாதி வெறியை தூண்டும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய் !

*தலித்துகள் மீதான தருமபுரி கலவரத்திற்கு அடிப்படை, நோக்கம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு ஆவன செய் !

தமிழக மக்களே !

*சாதி இந்துக்களின் மவுனமே தலித்துகள் மீதான சாதிவெறித் தாக்குதலுக்கு அடிப்படை !

*பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக போராடுவோம் !

கண்டன ஆர்ப்பாட்டம்

தலைமை:

திரு.சு.மில்டன்,
வழக்குரைஞர், செயலாளர்,  மனித உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை.

கண்டன உரை:

திரு.என்.ஜி.ஆர். பிரசாத், மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.இரா.சங்கரசுப்பு, மூத்த வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

பேராசிரியர். திரு.அ.கருணானந்தம், வரலாற்றுதுறை முன்னாள் தலைவர், விவேகானந்தர் கல்லூரி, சென்னை.

திரு.அரங்க சம்பத்குமார், வழக்குரைஞர், சென்னை உயர்நீதி மன்றம்.

திருமதி.அ.அருள்மொழி, வழக்குரைஞர்,  சென்னை உயர்நீதி மன்றம்.

திரு.வே.மதிமாறன், எழுத்தாளர்.

திரு.ஜானகிராமன், வழக்குரைஞர், செயலாளர், ம.உ.பா.மையம், தருமபுரி.

திரு கிருஷ்ணக்குமார், வழக்குரைஞர், செயற்குழு உறுப்பினர், சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் சங்கம்.

தோழர்.பா.விஜயக்குமார், பொருளாளர்,   புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு.

திரு.சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

பாதிக்கப்பட்ட மக்களின் நேருரை.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடுதல்.

நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி.

இடம் : மெமோரியல் ஹால், சென்னை.  (அரசு பொது மருத்துவமனை எதிரில்)

அனைவரும் வருக!

___________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – சென்னை கிளை.

தொடர்புக்கு : 98428 12062.

____________________________________________________