Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

அப்சல் குரு தூக்கு : மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

-

நாடாளுமன்ற தாக்குதல் நாடகம்! அப்சல் குருவுக்கு அநீதியான தூக்கு!
மதுரை உயர்நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 12.02.2013 செவ்வாய்
நேரம் : காலை 10.00 மணி
பங்கேற்போர்
: மனித உரிமை போராளிகள், ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், புரட்சிகர இயக்கங்கள்

ஆர்ப்பாட்டம் செய்திட! அனைவரும் வருக!

மதுரை ஆர்ப்பாட்டம்

___________________________________________________________________

  • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., இந்து மதவெறி பாசிஸ்டுகளை திருப்திபடுத்தவே அப்சல்குரு தூக்கு!
  • ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கரவாதிகள் என்று சொன்ன மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அதற்குப் பரிகாரமாய் அப்சல் குருவை இரகசியமாய் தூக்கிலிட்டுஅறிவித்தார்!
  • சங்கப் பரிவாரங்கள் இந்து பயங்கர வாதிகள் என்றால் காங்கிரஸ் மதச்சார்பற்ற முகமுடி அணிந்த பயங்கரவாதி!
  • இந்திய–ஐரோப்பிய– அமெரிக்க அரசுகளின் பயங்கரவாதமே இசுலாமிய தீவிர வாதத்துக்கு அடிப்படை!
  • நாடாளுமன்றத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்து மூளையாகச் செயல்பட்டது இந்திய உளவுத்துறை ராவும் இந்து மதவெறி பாசிஸ்டு அத்வானியும் தான்! அதை மூடி மறைக்கவே அப்சல் குரு அவசரக் கொலை.
  • உச்சநீதிமன்றம் உச்சிக்குடுமி மன்றம். இந்திய தேசிய மன சாட்சி என்பது இந்து மதவெறி மனசாட்சி தான்!
  • இந்தியாவில் நீதி, நியாயம், ஜன நாயகம் என்பதெல்லாம் வெற்றுக்கூச்சல்.
  • புனிதமான நாடாளுமன்றமா? கிரி மினல்கள் பொங்கி வழியும் குற்றவாளிகளின் கூடாரமா?
  • இந்திய அரசே!
    காஷ்மீரை கபளீகரம் செய்யாதே!
    7லட்சம் ராணுவத்தை வெளியேற்று!
  • காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி!
  • மதத் தீவிரவாதிகளின் பெயரால்–அரசு பயங்கரவாதம் தாண்டவமாடுகிறது!
    மறுகாலனியாக்கத்தை எதிர்த்துப் போராடும் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கவே தீவிரவாதம், பயங்கரவாதம் வளர்க்கப்படுகிறது.
    சிறப்பு ஆயுதச் சட்டம், பயங்கர வாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்.
    பதட்டமான பகுதி என்று அடுக்கடுக்காகப் போட்டுவரும் கருப்புச் சட்டங்கள் பன்னாட்டு மூலதனத்துக்குப் பாய் விரிக்கத் தான்.
    நாட்டை மீண்டும் அடிமை யாக்கும் அனைத்து ஓட்டு சீட்டு
    அரசியல்தரகர்களை எதிர்த்துப் போராடாவிட்டால் நாளையப் பொழுது நமக்கில்லை, கார்ப்பரேட்களுக்கே!
  • சிங்… சிங்… மன்மோகன் சிங்,
    நீயா… நீயா… சோனியா
    பசி… பசி… அகோர பசி, நாட்டை விற்றும் அடங்காத பசி
    பச்சை துரோகத்துக்குப் பெயர் தேச பக்தி!

சட்டம்,நீதி, மனித உரிமைகளை மீறி படுகொலைகளை ரகசியமாக அரங்கேற்றும் போலி ஜனநாயக அரசினை எதிர்த்துப் போராடுவோம்!
போராடும் உரிமைகளை இழக்கும் முன் போராடும் துணிவைப் பெறுவோம்!

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்–தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை,
தொடர்புக்கு – 94434 71003