Monday, April 21, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்அப்சல் குரு - உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !

அப்சல் குரு – உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம் !

-

04-chennai-demoப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கறுப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம்

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, உயர்நீதிமன்ற வழக்குரைஞர்களை ஒருங்கிணைத்து சென்னை உயர்நீதிமன்ற வாயிலில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தினை தலைமையேற்று நடத்திய சென்னைக் கிளை செயலாளர் வழக்குரைஞர். மில்ட்டன் பேசியதாவது:

”அப்சல் குருவின் மீதான வழக்கு விசாரணை அவருக்கான சட்டபூர்வ வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டு நடத்தப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்படவும் இல்லை. அவருக்காக விசாரணை நீதிமன்றம் நியமித்த ஒரு இளம் வழக்குரைஞர் அவரை ஒருமுறை கூட சென்று சிறையில் பார்த்து பேசாமலேயே வழக்கினை நடத்தியுள்ளார். ஆனால் உச்சநீதிமன்றம் இந்திய மக்களின் மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவை தூக்கிலிட வேண்டுமென்று தீர்ப்பு வழங்கி தேசிய வெறிக்கு துணை போனது. ஆளும் காங்கிரஸ் அரசோ, திருட்டுத்தனமாக மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிக்காமல், இரகசியமாக இந்த அரசியல் படுகொலையை நிகழ்த்தியுள்ளது. இது காஷ்மிர் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஒடுக்குகின்ற, மக்களை அச்சுறுத்தும் பாசிச நடவடிக்கையே! இதைக் கண்டித்து ஜனநாயகத்தை விரும்பும் ஒவ்வொருவரும் போராட வேண்டும்”

கண்டன உரையாற்றிய மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு பேசியதாவது:

”குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தவுடன், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்காட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்ற கீழ்த்தரமான சிந்தனையில் மத்திய அரசு அவசரமாகவும், இரகசியமாகவும் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது. கருணை மனு தாமதமாக தள்ளுபடி செய்த ஒரே காரணத்துக்காக பல தீர்ப்புக்களில் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை இரத்து செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரும் மரண தண்டனையின் விளிம்பில் இருப்பதை நாம் அறிவோம். தொடர்ந்து போராடுவதன் மூலம் தான் நாம் அவர்களை காப்பாற்ற முடியும்”

 

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!
அப்சல் குருவை தூக்கிலிட்டதை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

நிரூபணமாகாத குற்றச்சாட்டு
பொய்யான சாட்சியங்கள்
குடும்பத்தை பணயமாக்கி
மிரட்டி பெற்ற வாக்குமூலம்
அப்சல் குருவின் குற்றத்தை
நிரூபிக்கும் ஆதாரமாம்!

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு
சட்டவிரோத விசாரணை நடத்தி
அநீதியாக வழங்கப்பட்டதே
அப்சல் குருவின் தூக்கு தண்டனை!

நிரூபணமில்லா குற்றச்சாட்டில்
தேச வெறியின் வால் பிடித்து
தூக்கு தண்டனையை உறுதி செய்த
உச்சநீதி மன்றத்தின்
தீர்ப்பு வழங்கிய நடவடிக்கை
சட்ட விரோதம் – அநியாயம்!

அதிகாரத்தை தக்க வைக்க
பிஜேபி போட்ட நாடகமே
பாராளுமன்ற தாக்குதல்!
ஊழல் கறையை மறைப்பதற்கு
காங்கிரஸின் சூழ்ச்சிதான்
அப்சல் குருவின் தூக்கு தண்டனை!

அப்சல் குருவின் குடும்பத்திற்கு
தகவல் கூட அளிக்காமல்
இரகசியமாய் நிறைவேற்றிய
அப்சல் குருவின் தூக்கு தண்டனை
சட்ட விரோத அரசியல் படுகொலை!

கார்கில் போர் சவப்பெட்டியில்
காசு பார்த்த பிஜேபியும்
போபர்ஸ் பீரங்கியில்
பொறுக்கித் தின்ற காங்கிரசும்
நாட்டின் பாதுகாப்பை பேசுவது
வெட்கக் கேடு! வெட்கக் கேடு!

தேசிய வெறியைக் கிளப்பிவிட்டு
தீவிரவாதப் பீதியூட்டும்
காங்கிரசின், பீஜேபியின்
முகத்திரையை கிழித்தெறிவோம்!

தேச வெறியின் பெயராலே
வழங்கப்படும் தூக்கு தண்டனை
அரசியல் படுகொலை என்பதை
அம்பலப்படுத்திப் போராடுவோம்!

அப்சல் குருவின் தூக்குக்கு எதிராக
போராடும் காஷ்மீர் மக்களுக்கு
ஆதரவளிப்போம்! போராடுவோம்!

அரச பயங்கரவாதத்தை
சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையை
முறியடிக்க போராடுவோம்!

காஷ்மீர் மக்களின்
சுயநிர்ணய உரிமைக்காக
குரல் கொடுப்போம்! ஆதரிப்போம் !