Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக - கோவையில் ஆர்ப்பாட்டம்!

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – கோவையில் ஆர்ப்பாட்டம்!

-

ரியானா மாநிலத்தில் மாருதி சுசுகி நிர்வாகம் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தைக் கண்டித்து நாடு முழுவதும் 15 மாநிலங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றின் தொடர்ச்சியாக கோவையில் 08.02.2013-ம் தேதி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு எதிராக செயல்படும் முதலாளித்துவத்தை வீழ்த்துவது நமது கடமை குறிப்பிட்டார்.

கண்டன உரையாற்றிய மாவட்டச் செயலாளர் 2012 – ஜூலை மாதம் வன்முறை நடந்ததாக அரசு கூறுகிறது. கடந்த 8 மாதங்களில் 2000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். நிர்வாகம் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டி பேசினார்.

தோழர் பூவண்ணன் நன்றி உரை ஆற்றினார்.


தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, கோவை