Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

ஈழப் படுகொலை: தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!

-

“ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில் ஐ.நாவிற்கும், டெல்லிக்கும் காவடி தூக்குவதை நிராகரித்து தமிழகத்தில் மீண்டும் மாணவர் எழுச்சியைத் தோற்றுவிப்போம்” என்ற முழக்கத்தின் கீழே ம.க.இ.க – புமாஇமு- புஜதொமு – பெவிமு ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று காலை 11 மணி அளவில் அண்ணா சாலையில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம்.

புமாஇமுஇனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க , ஈழத்தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலை நாட்ட வேண்டுமெனில் தமிழகத்தின் வீதிகளில் 1980களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் 15.03.13 அன்று காலை 11 மணி அளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதில் மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

தொடர்புக்கு:

தோழர்.கார்த்திகேயன்
சென்னைக்கிளைச்செயலர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
எண்:41, பிள்ளையார் கோயில் தெரு,மதுரவாயல், சென்னை – 95
பேச : 9445112675