Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் - படங்கள்!

பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் – படங்கள்!

-

ழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்ணனி சார்பில் இன்றைக்கு (21/03/2013) பச்சையப்பன் கல்லூரிக்கு வெளியே சாலைமறியல் நடத்தப்பட்டது. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போலீசு மாணவர்களை கலைக்க முயற்சி செய்தது, மாணவர்களின் ஒற்றுமை, போர்க்குணம் ஆகியவற்றால் கூட்டத்தைக் கலைக்க இயலவில்லையின் , தடியடி நடத்தி கலைத்தது. தடியடியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்காயம் அடைந்தனர். குறிப்பாக  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி இன் பச்சையப்பன் கல்லூரி கிளைச்செயலாளர் தோழர் ஏழுமலையை, ஏழெட்டு போலீசு கும்பல் அடித்து துவைத்து ஒட்டு மொத்த மாணவர்கள் மீது இருந்த கோபத்தையும் தீர்த்துக்கொண்டது, தோழர் ஏழுமலை மயங்கி கீழே விழுந்துவிட்டார் அவரை ஜீப்பில் அள்ளிப்போட்டுகொண்டு G3 காவல் நிலையத்திற்கு ஜீப் பறந்தது!

இந்த தடியடியை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த புதிய ஜனநாயகம் செய்தியாளரையும் போலீஸ் அடித்ததோடு மட்டுமல்லாமல் அவரிடமிருந்த காமரா செல்பேசியை பிடுங்கி அதில் உள்ள தடியடி படங்களை அழித்து விட்டே திருப்பிக் கொடுத்தது.

எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்!

மாணவர் வர்க்கமாய் ஒன்று திரண்டு போராடுவோம்! இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் போல பல மடங்காக எங்களது போராட்டத் தீ பற்றி பரவும்!

படங்களை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்ணனி,
தமிழ்நாடு