Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கசாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!

சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!

-

சாஸ்திரி பவன்ழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி இன்று நடத்தும் போராட்டம் குறித்த அறிவிப்பு:

இலங்கையின் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களை மறுத்து விட்டு ராஜபக்சே அரசைக் காப்பாற்றுவதற்காக நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானத்தைக் கண்டித்தும், அதற்கு உடந்தையாக இருந்த மற்றொரு போர்க்குற்றவாளியான இந்திய அரசைக் கண்டித்தும்,

நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாசிச ஜெயாவின் போலீசைக் கண்டித்தும்,

இன்று மாலை 3.30 மணிக்கு மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைவரும் கலந்து கொள்ளுமாறும், போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோருகிறோம். தமிழகத்தில்  மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.

– இவண்
கணேசன், ஒருங்கிணைப்பாளர், 9566149374
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
மின்னஞ்சல் : studentfront2013@gmail.com