Monday, April 21, 2025
முகப்புஉலகம்ஈழம்மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!

மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!

-

பத்திரிக்கையாளர் சந்திப்பு

ழத்தமிழ் மக்களுக்காகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்தும், எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பும்…

sbhavan-7அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் வெற்றியல்ல – அது ஒரு ஏமாற்று.
ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறி ராஜபக்‌ஷே கும்பலை போர்க்குற்றவாளிகள் என அறிவித்து பொது விசாரணை மூலம் தண்டிக்க வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்தும் மாணவர்களைத் திரட்டி போராட உள்ளோம். இது பற்றிய எமது அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். எனவே, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்திருந்து எமது செய்தியை வெளியிடுமாறு தங்களை அன்புடன் கோருகிறோம்.

நாள்: 25.3.2013
நேரம்: நண்பகல் : 12 மணி
இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்.

தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி வருகிறது. இத்தகைய போரட்டங்களில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசின் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், தொடர்ந்து மாணவர் போராட்டத் தீயை வளர்த்தெடுப்போம்!

எமது கோரிக்கைகள்

1) ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் மோசடியானது. அதை எதிர்க்கிறோம்!

2) இராஜபக்சேவை சர்வதேசப்போர்க்குற்றவாளியாக அறிவித்து, நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

3) ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவண்
கணேசன்,ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி,
9566149374