Monday, April 21, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்!

ஈழம் : நாளை மாணவர் முன்னணியின் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்!

-

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஓர் அறைகூவல்!

ழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும்……….
போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும் …..
சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து பேரணி –
சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம்

நாள்: 28.3.2013, நேரம்: காலை 11.00

அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று!
ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!

என்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி 28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

கடந்த 15 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அனைத்துக் கல்லூரி மாணவர்களும் திரளாக அணிதிரண்டுவர வேண்டுமென அறைகூவி அழைக்கிறோம்.

இவண்
கணேசன், ஒருங்கிணைப்பாளர்
9566149374

தகவல் : ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி