Wednesday, April 23, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பாமக சாதிவெறிக்கு மதுரையில் செருப்படி !

பாமக சாதிவெறிக்கு மதுரையில் செருப்படி !

-

பா.ம.க. சாதிவெறிக்கு இளவரசன் பலி

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மதுரை மாவட்டக்கிளை  கண்டன ஆர்ப்பாட்டம்.

ளவரசனை காவு வாங்கிய பா.ம.கவின் சாதிவெறியைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – மதுரை மாவட்டக்கிளை சார்பாக 09.07.2013 காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றம், மதுரைக்கிளை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் மு.திருநாவுக்கரசு தலைமைப் பொறுப்பேற்றார்.

“பா.ம.கவின் சாதிவெறி இளவரசன் என்ற இளைஞனை வாழவிடாமல் பலிவாங்கியது அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது. பெரியாரின் கொள்கைகள் தோன்றிய இந்த மண்ணில் இப்படிப்பட்ட சாதிக்கொடுமைகள் நிகழ்வதை நாம் அனுமதிக்கக்கூடாது. சாதிவெறிக்கு எதிராக வேறுபாடற்ற முறையில் ஒன்றிணைந்து போராடவேண்டும்” என்று முன்னணி வழக்கறிஞர் லஜபதிராய் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான், மோகன்தாஸ்காந்தி, மற்றும் வழக்கறிஞர்கள் அருணாச்சலம், கந்த வடிவேல், வழக்கறிஞரும் எழுத்தாளருமான ராபர்ட் சந்திரகுமார் ஆகியோர் பா.ம.கவின் சாதிவெறியைக் கண்டித்தும் இளவரசனுடைய சாவு சாதிவெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வதாகவும் இருந்தது என்றும் இந்த சாவு தற்கொலை என்று நம்பமுடியாத அளவிற்கு பெரும்பான்மை மக்கள் கொலை என்றே பேசுகின்ற வகையில் உள்ளது என்று தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச்செயலாளர் வாஞ்சிநாதன் பேசும் போது இளவரசன், திவ்யா திருமணத்திற்கு பிறகு, அவர்களின் வாழ்வு சிதைப்பதற்காக ராமதாசு, அன்புமணி ராமதாசு, காடுவெட்டிகுரு, தர்மபுரி வழக்கறிஞர் பாலு மற்றும் வன்னிய சாதிவெறியர்கள் திட்டமிட்டு இளவரசனுடைய மரணத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பதை முந்தைய நிகழ்வுகளில் இருந்து தொகுத்துரைத்தார். இளவரசனின் சாவு ஒருவேளை தற்கொலையே ஆனாலும் கூட வன்னிய சாதிவெறியர்கள் திட்டமிட்டு நிகழ்த்திய படுகொலையே ஆகும். இதற்கு காரணமான ராமதாசு மற்றும் சாதிவெறிக்கூட்டாளிகளை வன்கொடுமை கொலைவழக்கின் கீழ் கைது செய்ய வேண்டும், பா.ம.க வன்னியர் சங்கத்தை உடனே தடை செய்ய வேண்டும். கௌரவ கொலையை தடுக்கும் வகையில் இளவரசனின் மனைவி திவ்யாவுக்கு அரசு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரினார்.

மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் ம.லயனல் அந்தோணிராஜ் பேசும் போது “அரசியல் ரீதியாக படுதோல்வி அடைந்த ராமதாசு வன்னிய சாதிவெறியைத் தூண்டி அதிலே அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். எனவேதான் சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை ஏற்றுக்கொண்டு இளவரசனின் சாவுக்கு காரணமாகியுள்ளார். தமிழ்நாட்டை ஆண்ட பரம்பரையாகிய வன்னியர்குல சத்திரியர்களே மீண்டும் ஆளவேண்டும். இதை எதிர்வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலே வன்னியர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று ஊர்ஊராக பேசிவருகிறார். அனைத்து சமுதாயப் பாதுகாப்பு பேரவை என்று ஏற்படுத்திக்கொண்டு ஆதிக்க சாதிவெறியர்களை ஒன்றினைத்து தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த  மக்களை எதிரிகளாக்கி வன்கொலை செய்து அரசியல் ஆதாயம் தேட கனவு காண்கிறார். இந்த சாதிவெறியர்களை பெரியாரின் வாரிசுகள் ஜனநாயக முற்போக்கு மற்றும் புரட்சிகர இயக்கங்களை சார்ந்தவர்கள் இதனை ஒன்று கூடி மக்களைத்திரட்டி முறியடிக்கவேண்டும். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சட்டரீதியாகவும், களத்தில் நின்றும் போராடும். சாதிமறுப்பு முற்போக்குத் திருமணங்களை ஊக்குவிக்கும், இளவரசன் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும்வரை நமது போராட்டம்  ஓயக்கூடாது” என்றும் பேசினார்.

செயற்குழு உறுப்பினர் சே.கணேஷ் நன்றியுரையாற்றினார்.

ராமதாசின் உருவப்படம் ஆர்ப்பாட்டத்தின் போது செருப்பால் அடிக்கப்பட்டு காரி உமிழப்பட்டது. 100-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

முன்னதாக ராமதாசு கும்பலை கைது செய்யக்கோரியும், பா.ம.க, வன்னியர் சங்கங்களை தடைசெய்யக்கோரியும் மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டறிக்கைகளும் விநியோகிக்கப்பட்டன. சாதிவெறியர்களை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது.


[படங்களை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :  மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மதுரை மாவட்டக்கிளை