Monday, April 21, 2025
முகப்புசெய்திஆம்பூர் தோல் முதலாளிகள் விரும்பாத புஜதொமு கருத்தரங்கம் !

ஆம்பூர் தோல் முதலாளிகள் விரும்பாத புஜதொமு கருத்தரங்கம் !

-

ambur-meet-2தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்! முதலாளித்துவப் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

என்கிற முழக்கத்தை முன்வைத்து வேலூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் 16-07-2013 அன்று சாவித்ரி போடி நாயுடு திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

தொழிலாளர்கள்,பெண்கள்,சிறுவர்கள் என 130 பேர் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்திற்கு பகுதி தோழர் சுந்தர் தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைவர் தோழர் அ.முகுந்தன் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினர்கள். இறுதியாக ம.க.இ.க வின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சிறப்புரையில், ஆம்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தோல் மற்றும் காலணி (SHOES) தொழிற்சாலைகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் 27 வருடங்களாக வேலை செய்து வந்த போதும் ரூ.6000, ரூ.7000 தான் சம்பளம் பெற்றுவருகின்றனர். இதை வைத்துக் கொண்டு எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளம் கொடுக்க மறுக்கும் முதலாளிகள், தொழிலாளர்களுக்கு எவ்வித அடிப்படை உரிமைகளையும் கொடுப்பதில்லை. குறிப்பாக சங்கம் வைக்கும் அடிப்படை உரிமைப் பற்றி பேசினாலே தொழிலாளர்களை வேலையை விட்டு வெளியே அனுப்புவது இல்லையென்றால் காவல்துறை மூலம் மிரட்டுவதும் நடக்கிறது. நாடு முழுவதுமே இதே நிலைதான் நடக்கிறது என பேசினார்.

மேலும், தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் விளைவாக நாட்டிலுள்ள அனைத்து வளங்களையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும்,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது என்பதை அம்பலப்படுத்தி பேசினார். இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் புரட்சிகர அமைப்பான பு.ஜ.தொ.மு வில் இணைந்து போராட வேண்டும் என்கிற அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

இதனுடாக கருத்தரங்கிற்கு வந்தவர்களுக்கு பு.ஜ.தொ.மு வில் இணைந்து செயல்பட வேண்டும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ambur-meet-2இறுதியாக, தோழர் ஆனந்தன் நன்றியுரை ஆற்றினார்.

இக்கருத்தரங்கம் நடந்த மண்டப உரிமையாளரை மிரட்டி நிகழ்ச்சியை தடை செய்ய காவல்துறையினர் முயற்சித்தனர். நிகழ்ச்சிக்கு முந்தையநாள் இரவு 12 மணியளவில் மண்டப உரிமையாளருக்கு போன் செய்து கூட்டம் நடத்தப்போகும் அவர்கள் யார்? அவர்கள் முகவரி கொடு! எங்களை கேட்காமல் எப்படி அனுமதி தரலாம்? எனும் வகையில் அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியது காவல்துறை. இதனால் மண்டம் தர மறுத்து நம்மிடம் காவல்துறையிடம் அனுமதி வாங்கி வாருங்கள் எனக்கூறி கண்ணீர் விட்டார் மண்டப உரிமையாளர். பிறகு தோழர்கள் காவல்துறையை அழைத்து அவர்களிடம் நேரில் பேசிய பின்பு உரிமையாளர் ஏற்றுக்கொண்டார், நிகழ்ச்சியை பார்த்தபின்பு மண்டப உரிமையாளர் ஆதரவாக பேசினார்.

வழக்கமாக மாலை 3 அல்லது 4 மணிக்கு ஷிப்ட் முடித்து வெளிவரும் தொழிலாளர்களை நிகழ்ச்சியன்று கூடுதல் வேலை (OVER TIME) செய்யும்படி கட்டாயப்படுத்தி நிகழ்ச்சிக்கு வருவதை தடுக்க சில கம்பெனிகள் முயற்சித்தன. எனினும் மொத்தமாக 130 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக்கொள்ள கருத்தரங்கம் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை விதைத்துள்ளது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க