Monday, April 21, 2025
முகப்புசெய்திமோடியை விரட்டுவோம் - சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !

மோடியை விரட்டுவோம் – சென்னை, திருச்சி ஆர்ப்பாட்டப் படங்கள் !

-

சென்னை

பத்திரிக்கைச் செய்தி

”இந்து மதவெறி பாசிஸ்ட் நரேந்திர மோடியே, தமிழகத்தை விட்டு வெளியேறு” என்கிற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞ்ர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதன் ஒரு பகுதியாக, சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்துக்கு பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலாளர் தோழர்.ஜெயராமன் தலைமை தாங்கினார்.பு.மா.இமு-வின் சென்னை மாவட்ட இணைச்செயலாளர் தோழர்.சேட்டு கண்டன உரையாற்றினார். 10 பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

திருச்சி

மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டம்

திருச்சி வேர்ஹவுஸ் பாலத்தின் அருகில் காலை 11.30 மணியளவில் ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன் அவர்கள் தலைமையில் 19 பெண்கள் உட்பட 120-க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர். அனைத்து தோழமை அரங்கின் தோழர்களும் இதில் கலந்து கொண்டனர். நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று நோட்டீஸ்களை வாங்கிப் படித்தனர்.

அ சரவணன்
மாவட்டச் செயலர்,
ம.க.இ.க
திருச்சி மாவட்டம்
அலை பேசி : 73732 17822

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திருச்சி – மனித உரிமைப் பாதுகாப்பு மையம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு தலைமையில் திருச்சி மாவட்டத் தலைவர் ஆதிநாராயண மூர்த்தி, மதுரை மாவட்டத் தலைவர் லயனல் அந்தோணி ராஜ், கடலூர் மாவட்டத் தலைவர் குணசேகரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் தோழர்களும் கருப்புக் கொடி ஏந்தி திருச்சி நீதிமன்றத்தின் வாசலில் காலை 10 மணி அளவில் நரேந்திர மோடி உருவப் படத்தை எரித்து கைதானார்கள்.

சட்டவிரோதமாக மோடிக்கு ஃபிளக்ஸ் வைத்து விளம்பரம் செய்ய அனுமதித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், ஃபிளக்ஸ் பேனர்களை தாங்களாகவே கிழித்து விட்டு முஸ்லீம்களும் ம.க.இ.க.-வினரும் கிழித்து விட்டார்கள் என்று முஜாபர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வதந்திகளை பரப்பி கலவரங்களை நடத்தியது போல திருச்சியிலும் தூண்ட முயற்சித்த பாஜக-வினரை அம்பலப்படுத்தியும், மதக் கலவரத்தைத் தூண்டி விட்டு பதவி சுகம் அனுபவிக்க மக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.
பேச : 94432 60164