Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆங்கிலக் கல்வியை கண்டித்தால் தீவிரவாதியா ?

ஆங்கிலக் கல்வியை கண்டித்தால் தீவிரவாதியா ?

-

தமிழ்நாடு போலீஸ்பத்திரிகைகளில் வெளியான செய்தி

ஆங்கிலக் கல்வியை கண்டித்து
தர்மபுரியில் இரவில் நோட்டிஸ் ஒட்டிய 2 பேர் அதிரடி கைது

செப்டம்பர் 19

மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலும் தர்மபுரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் கல்வி என்ற சேவை வியாபாரம், பண்டம் அல்ல. தமிழ் என்பது தன்மானம், ஆங்கிலம் என்றால் அடிமைப்புத்தி, மக்கு பிள்ளைகளை அறிவாளி ஆக்குவது அரசுப் பள்ளி, அப்படிப்பட்ட அரசு பள்ளியில் தற்போது ஆங்கில கல்வி கற்பிக்கப்பட்டு வருவது தமிழர்களுக்கு பேரிழப்பு. ஆகவே, ஆங்கில கல்வியை அனைவரும் புறக்கணிப்போம் என்றும், இப்படிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே தர்மபுரியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் நக்சல் தனிப்பிரிவு போலீசார் எந்நேரமும் தீவிர ரோந்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் நேற்றும் போலீசார் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரி டவுன் பகுதியில் நோட்டீஸ் ஒட்டிக் கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பென்னாகரத்தைச் சேர்ந்த நாராயணன் (24), ராஜா (23) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த நோட்டீஸ், துண்டு பிரசுரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
___________________________

மக்கள் பிரச்சனைகளுக்காக அரசை எதிர்த்து போராடுபவர்களை கைது செய்வதற்காகத்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்பதும், நக்சல் எதிர்ப்பு போலீசாரின் வேலையில் ஒன்று தனியார் ஆங்கிலப் பள்ளிகளின் வணிகத்தை பாதுகாப்பதுதான் என்பதும் இதிலிருந்து தெளிவாகிறது.
____________________________________________
தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி
___________________________________________