Monday, April 21, 2025
முகப்புசெய்திஇன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

இன்று சென்னை வரும் கொலைகார மோடியை எதிர்த்து மாணவர் போராட்டம் !

-

இந்தியாவின் ராஜபக்சே !
இந்து மதவெறி பாசிஸ்ட் கொலைகார  மோடியே
தமிழகத்தில் நுழையாதே!

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட மோடி கார்ப்பரேட்  நிறுவனங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட பலூன். கல்வி , மருத்துவம் வேலை வாய்ப்பு என அனைத்திலும் மிகவும் பின் தங்கியுள்ள குஜராத்தை முன்னோடி மாநிலமாகக் காட்டும் பொய்ப் பிரச்சாரத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் புரட்சிகர அமைப்புக்கள் களமிறங்கியிருப்பது அனைவரும் அறிந்ததே.

இன்று மோடி தமிழகத்துக்கு வருவதற்கு எதிராக ம.க.இ.க, புமாஇமு, புஜதொமு, பெவிமு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அது காவல் துறையால் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டம் 26-ம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோடி சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள நூற்றாண்டு மண்டபத்திற்கு வரவுள்ளதால் போலீசு பல்கலைக் கழகத்தின் வாசலில் உட்கார்ந்து கொண்டு  அடையாள அட்டை இல்லாத மாணவர்களை மிரட்டுவதும் விரட்டுவதுமாக உள்ளது. மேலும் உழைக்கும் மக்களை வெடிகுண்டு வைத்துக் கொல்லும் இந்தக் கொலைகாரனுக்கு மாணவர்களால் பாதிப்பு என்பது போல மாணவர்களின் பையை சோதனையிடுவது, சாப்பாட்டில் குண்டு இருக்கிறதா எனத் தேடி வருகிறது காவல் துறை.

பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பன பாசிசத்துக்கு அனுமதி இல்லை என்பதை பறை சாற்றும் விதமாகவும் மாணவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் இந்த அயோக்கியத்தனத்துக்கு எதிராகவும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் சென்னை சென்ட்ரலில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்களிப்போடு இன்று (18.10.2013) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பார்ப்பன பாசிஸ்டுக்கு எதிரான முழக்கங்களுடன் தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் கொலைகார நரேந்திர மோடியே வெளியேறு என்று மாணவர்கள் விண்ணதிர முழங்கினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர்.த.கணேசன், மாணவர்களை குற்றவாளியாக்கி கொலைகாரனுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையை கண்டித்துப்பேசினார். அரசு நிறுவனத்தில் மத வெறியனுக்கு இடம் கொடுத்த அயோக்கியத்தனத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார். “எப்படி ராஜபக்சேவுக்கு எதிரான மாணவர் எழுச்சி உருவானதோ அதைப்போல மோடிக்கெதிரான தீயை, மாணவர் எழுச்சியை பற்ற வைப்போம்” என்று கூறிமுடித்தார்.

“பெரியார் பிறந்த மண்ணிலே இந்து மதவெறியை, இந்திய ராஜபக்சேவை அனுமதிக்க முடியுமா” என்று தோழர் கணேசன் எழுப்பிய வினாவுக்கு பதில் அளிக்கும் விதமாக, “மோடியை அனுமதிக்க முடியாது” என்று உரத்து முழங்கினார்கள் மாணவர்கள்.

அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள் ஆனால், கொலைகார மோடி எந்த வேசம் போட்டாலும் கிழித்து தொங்க விடுவதற்கு இதோ மாணவர்கள் தயாராகிவிட்டார்கள். தமிழகத்தில் 100 பொதுக்கூட்டங்கள் நடத்தினாலும் அத்தனை இடத்திலும் பதிலடி கொடுப்பார்கள் மாணவர்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு