புத்தகங்கள் கிடைக்கும் இடம்
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி…
10.01.2014 முதல் 22.01.2014 வரை
சென்னை புத்தகக் கண்காட்சி
ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்வி மைதானம், நந்தனம், சென்னை.
கடை எண் : 369-370
வேலை நாட்கள் : பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை
1. இதுவல்லவோ கதை…
சிறுகதை தொகுப்பு
வாழ்க்கைக்கான போராட்டத்தில் அற்பத்தனங்கள், காதல், உழைப்பு, அர்ப்பணிப்பு, பொதுநலனில் மகிழ்ச்சி இவைகளைப் பற்றி நாம் தவறவிடும் கண்ணோட்டங்களை உணர வைப்பதில் உயிரோட்டமாக பங்காற்றுகின்றன இச்சிறுகதைகள்.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை -40
பக்கம்-128.
2. தண்ணீர் தாகத்திற்
கா இலாபத்திற்கா?
தண்ணீர் தனியார்மயம் பற்றிய அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை -30
பக்கம்-72.
3. மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ் கார்ன் ஃபோர்த்
மார்க்சிய தத்துவத் துறையில் மிக உயர்ந்த தேர்ச்சி பெற்ற கார்ன் ஃபோர்த் தான் கற்றது அனைத்தையும் எளிய முறையில் தொழிலாளர்களுக்கு எடுத்துச்சொல்லும் விதமாக நூல்கள் ஆக்கினார். மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி என்ற இவரது நூல் மிகச்சீரிய அரிய முயற்சி.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை -150
பக்கம்-272.
4. தாது மணல் கொள்ளை – உண்மை அறியும் குழு அறிக்கை.
மனித உரிமை பாதுகாப்பு மையம்.
நன்கொடை – ரூ 20
பக்கம்-48.
5. ஈழம் தேவை- ஒரு நேர்மையான மீளாய்வு.
இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களான பிராந்திய மேலாதிக்கம், விரிவாக்கம், மூலதனக் கொள்கை ஆகியவற்றின் அடிப்படையிலானதுதான் இந்தியாவின் இலங்கை – ஈழக் கொள்கை.
ஆகவே இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு எதிராக ஒரு போதும் எந்த இந்திய அரசும் செயல்படாது என்று பலமுறை வலியுறுத்தப்பட்டும், எதார்த்தம் இடித்துரைத்தும் புலிகளும் அதன் ஆதரவாளர்களும் மாறாகவே நடந்தார்கள்..
வெளியீடு :
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு
விலை- ரூ 100
பக்கம் -240
6. படிப்பும் விடுதலைக்கான அறிவும் – தோழர் மருதையன்
மூளை என்ற பருப்பொருளே காலப்போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நாம் கடுமையாக உழைக்கும்பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால்…
உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்த தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதைப் பார்க்கும் போது என்ன செய்கிறீர்கள்?
இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பது மட்டுமல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது. ஏன்?
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை – ரூ 20
பக்கம்-30.
7. இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் -ஸ்டாலின்
முதலாளித்துவ முறையின் முரண்பாடுகளை நாம் மூடிமறைக்கக்கூடாது, அதற்கு பதிலாக அதன் முரண்பாடுகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும், சிக்கவிழ்த்துக் காட்ட வேண்டும். வர்க்கப் போராட்டத்தை நாம் தடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக, அதை அதன் முடிவுக்கு கொண்டு போக வேண்டும்.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை -ரூ 30
பக்கம்-56.
8. அரசும் புரட்சியும். – லெனின்
அரசு, புரட்சி குறித்த மார்க்சிய போதனைகளை திரித்துப் புரட்டும் சந்தர்ப்பவாத கருத்துக்களை விளக்கி, ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்து உழைக்கும் மக்களை விடுவிக்கும் மார்க்சிய தத்துவம் – நடைமுறையை தொகுத்து வழங்குகிறது இந்நூல்.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை -ரூ 90
பக்கம்-200.
9. கம்யூனிசத்தின் கோட்பாடுகள் – பிரெடெரிக் எங்கெல்ஸ்
மனிதன் உயிர்வாழ காற்றும் நீரும் மட்டும் போதுமா? அவன் சமுதாயமாக, சமத்துவமாக வாழ கம்யூனிசம் தேவை. அது எப்படி? என்று ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றனவா! அதற்கு பதில் சொல்லும் கருத்தில் உங்கள் சமூக அறிவை ஒருபடி உயர்த்துகிறது இந்நூல்.
கீழைக்காற்று வெளியீட்டகம்.
விலை – ரூ 25
பக்கம்-40.
10. சாதி – தீண்டாமை ஒழிப்பு என்ன செய்யப்போகிறீர்கள்.
ஆதிக்க சாதிவெறி கருத்துக்களை அம்பலப்படுத்துவதோடு சாதி தீண்டாமை ஒழிப்பிற்கான வழியையும் முன்வைக்கும் சிறு வெளியீடு
வெளியீடு:
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு
விலை- ரூ 10,
பக்கம் -24
11. சாதி ஆதிக்க அரசியலும், அடையாள அரசியலும்.
புதிய ஜனநாயகம் இதழ் கட்டுரைகள்.
விலை – ரூ 60
பக்கம்- 96
12. இலக்கிய இஸங்கள்.
இலக்கியத்தில் ரியலிசம், சர்ரியலிசம், மேஜிக்கல் ரியலிசம் போன்ற பல்வெறு இசங்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு. தொகுப்பாசிரியர் – இ.எஸ்.டி
அன்னம் பதிப்பகம்
விலை – ரூ 110
பக்கம் -160
13. எரியும் பனிக்காடு (Red Tea) – பி.எச்.டேனியல் (தமிழில் இரா.முருகவேள்)
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் மீதான கொடூரமான சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.
பொன்னுலகம் பதிப்பகம்
விலை – ரூ 150
பக்-336.
14. நவீன அரபு இலக்கியம் – எச் பீர் முகம்மது.
பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்ட அரபு படைப்பாளிகள் பற்றிய குறிப்புகள், மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.
எதிர் வெளியீடு
விலை- ரூ 120
பக்கம்-160
15. ஆப்கன் அவலம் : உலக நாடுகள் அலட்சியம் – மேசன் மக்மல்பாஃப்.
பல சர்வதேச விருதுகளை வென்ற புகழ்பெற்ற ஈரானிய திரைப்பட இயக்குனர் மக்மல்பாஃபின் ஆப்கனிஸ்தான் பற்றிய பதிவுகள்.
தமிழோசை பதிப்பகம்
விலை- ரூ 45
பக்கம்-64.
16. கவர்மெண்ட் பிராமணன் – அரவிந்த் மாளஹத்தி.
மைசூர் மானச கங்கேத்திரி பல்கலைக்கழகத்தில் கன்னட ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் அரவிந்த மாளஹத்தி கன்னட தலித் இலக்கியப் படைப்பாளிகளில் முக்கியமானவர். கவர்மெண்ட் பிராமணன் என்னும் இவரது சுயசரிதை கன்னட மொழியில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதையாகும்.
விடியல் பதிப்பகம்
விலை- ரூ 70
பக்கம்-136
17. டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது – மிகெய்ல் சோலோகோவ்.
பசுமை வெளிகளை பொறுக்கியெடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாய் கொறித்தெடுப்பது போல் அவ்வப்போது வீசும் தென்றலின் ஆராட்டு அப்பூமியில் நச்சுப் பாம்புகளின் சீறல்களும், கொடிய மிருகங்களின் பிளிறல்களும் குவிந்து கிடக்கையில் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீளும் சாதுக்களின் கதை இது.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.
விலை- ரூ 460
பக்கம்-570.
18. சுவாமி சகஜாநந்தா – எழுத்தும் பேச்சும்.
தலித் வரலாற்று ஆவணத் தொகுப்பு.
தாழ்த்தப்பட்டவரான சுவாமி சகஜாநந்தா தமிழக சட்டமன்ற மேலவை மற்றும் பேரவை உறுப்பினராக இருந்து உரிமைக்குரல் எழுப்பியிருக்கிறார்.
கரிசல் பதிப்பகம்
விலை- ரூ 100
பக்கம்-172
19. உள் ஒதுக்கீடு தொடரும் விவாதம். – ம.மதிவண்ணன்.
பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டுக்கெதிராக வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். அத்தனை வாத முனைகளையும் தர்க்கபூர்வமாகவும், வரலாற்று பூர்வமாகவும், அணுகுகிறார் ஆசிரியர்.
கருப்பு பிரதிகள்
விலை – ரூ 50
பக்கம்-80
20. குர்து – தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம். எச். பீர் முகம்மது.
குர்திஸ்தான் தேசிய இன பிரச்சினையை பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்தும் நூல்.
எதிர் வெளியீடு
விலை – ரூ 200
பக்கம்-240
21. ஹோ சி மின் ஜெயில் டைரி
தமிழில் : சுரா
வியட்நாம் விடுதலைக்காக பாடுபாட்ட தலைவர் ஹோசி மின்னின் எழுத்து
வ.உ.சி.நூலகம்
விலை – ரூ 50
பக்கம் – 112.
22. ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி.
உலகிற்கு ஜனநாயகத்தை கற்றுத்தரும் வெள்ளையர்களின், அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகறியச் செய்யும் நாவல். இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது விடுதலைக்காக போராடும் கருப்பின மக்களின் வரலாறு.
சிந்தன் புக்ஸ்
விலை – ரூ 130
பக்கம்-272
23. நினைவுகள் அழிவதில்லை – நிரஞ்சனா
காலனியாதிக்கத்திற்கு எதிரான கையூர் விவசாயிகளின் போராட்டம், அப்போராட்டத்தில் பிரிட்டீஷ் அரசால் தூக்கிலிடப்பட்ட கையூர் தோழர்களின் வீரக்கதை.
சிந்தன் புக்ஸ்
விலை – ரூ 100
பக்கம்-244
24. வன்னி யுத்தம்
புலிகளின் தோல்வி ஏன்? பின்னணி சொல்லும் புத்தகம்.
விகடன் பிரசுரம்
விலை- ரூ 125
பக்கம்-336
25. காலனித்துவ திரிகோணமலை
திரிகோணமலை வெளியீட்டாளர்கள்.
விலை- ரூ 180
பக்கம்-400
26. முல்லைப் பெரியாறு அணை – சில வெளிப்படுத்தல்கள்
-நீதியரசர் கே.டி.தாமஸ்.
இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகிற இரைச்சல் கோடிக்கணக்கான மக்களுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.
எதிர் வெளியீடு
விலை- ரூ 120
பக்கம்-144.
27. தமிழகத்தில் மின்வெட்டும், மின் கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும் – சா. காந்தி.
முகம் வெளியீடு
விலை- ரூ 110
பக்கம்-175.
28. பறவை உலகம் – ஸலீம் அலி, லயீக் ஃபதேஹ் அலி
குறிப்பிடத்தக்க இந்தியப் பறவைகள், அவற்றின் சிறப்பியல்புகள், அடையாளங்கள், என பல விவரங்கள் சாதாரண வாசகர்களுக்கு புரியும் வகையில் எளிய மொழியில் இந்நூலில் தரப்பட்டுள்ளன.
நேசனல் புக் டிரஸ்ட்
விலை- ரூ 60
பக்கம்-132.
29. மேலப்பாளையம் முஸ்லீம்கள் – பே சாந்தி
இலக்கிய சோலை
விலை – ரூ 80
பக்கம் – 134.
தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்த திரிசூலத்தின் கொலைவெறியே மோடி! கட்டுரை தொகுப்பு.
கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை- ரூ 120
பக்கம்-208
பாபர் மசூதிக்குள் இராமன் தோன்றிய இரகசிய வரலாறு. கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே. ஜா
விடியல் பதிப்பகம்
விலை- ரூ 150
பக்கம்-248
32. மார்க்சும் அறிவியலும் – ஜே.டி பெர்னல்
ஜே.டி பெர்னல் குறிப்பிடத் தகுந்த இயற்கை அறிவியலாளர், அறிவியல் வரலாற்றியலாளர், மார்க்சிய அறிஞர். அவர் இச்சிறு நூலில் மார்க்ஸ் எவ்வாறு ஒரு மார்க்சியம் என்னும் ஒருங்கிணைந்த கண்ணோட்டத்தை கண்டடைந்தார் என்பதை எடுத்துக் கூறுகிறார். இதன் மூலம் மார்க்சின் இயற்கை அறிவியல் பார்வையையும் விளக்குகிறார்.
முகம் பதிப்பகம்
விலை- ரூ 60
பக்கம்-93.
33. ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்வும் பணியும் – கிட்டி ஃபெர்கூசன்.
எதிர் வெளியீடு
விலை- ரூ 350
பக்கம்-432.
34. தமிழகப் பழங்குடிகள் – பக்தவத்சல பாரதி
மானுடவியலில் தொல்குடிச் சமூகம் பற்றிய ஆய்வு முக்கியமானது, இந்த நூல் தமிழ் தொல்குடியின் ஆதிச்சமூக நிலையிலிருந்து இன்றைய நவீன காலம் வரையிலான நெடிய வரலாறு பற்றி பேசுகிறது.
அடையாளம் பதிப்பகம்
விலை- ரூ 170
பக்கம்-226.
35. வரலாற்று மானுடவியல்
– பக்தவத்சல பாரதி
வரலாற்றை நுட்பமாக அறிய, அறிவிக்க ஒரு புதிய வாசிப்பு தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது இந்நூல்.
அடையாளம் பதிப்பகம்,
விலை- ரூ 165
பக்கம்-214
36. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் – ஜான் பெர்க்கின்ஸ்
அமெரிக்க அரசு, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இவற்றுக்கிடையான வலைப்பின்னல், இவை நடத்தும் சுரண்டல்கள், ஊழல் சதி இவற்றை தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து விளக்குகிறார் ஜான் பெர்க்கின்ஸ்.
விடியல் பதிப்பகம்
விலை- ரூ 200.
37. அந்நியப்படும் கடல் –வறீதையா கான்ஸ்தந்தீன்
நாட்டின் வளங்களும் இயற்கையும் வாழ்வாதாரங்களும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபவெறிக்கு பலியாக்கப்படுகிறது. நாடு மறுகாலனியாகும் பகுதியாக நமது கடலும் மூலதனத்தின் சுனாமியால் சூறையாடப்படுகிறது. கடலும், கடல் சார்ந்த வாழ்க்கையும் களவாடப்படுவதை எச்சரிக்கிறது இந்நூல்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை – ரூ 35
பக்கம்-64.
38. முஸ்லீம்கள் குறித்து அம்பேத்கர்
கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும் – ஆனந்த் தெல்தும்ப்டே
கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை – ரூ 65
பக்கம்-120.
39. இந்தியாவைப் பற்றி – கார்ல் மார்க்ஸ்
இந்திய நிலைமைகள் பற்றி மார்க்ஸ் அறிந்திருக்கவில்லை, இந்திய நிலைமைகளுக்கு மார்க்சியம் பொருந்தாது போன்ற கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக வெளிவந்துள்ளது இந்நூல். இந்தியாவை பற்றியும் அதன் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் பற்றியும் மார்க்ஸ் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல்.
விடியல் பதிப்பகம்
விலை- ரூ 390
40. கண்ணை மறைக்கும் காவிப் புழுதி. புதிய கலாச்சாரம் கட்டுரைகள்.
முஸ்லீம்கள் என்றால் தேச துரோகிகள், பயங்கரவாதிகள், பாக் கிரிக்கெட் அணிக்கு கைதட்டுபவர்கள், ஐ.எஸ்.ஐ சதிக்கு உதவுபவர்கள் போன்ற ஆர்.எஸ்.எஸின் முடிவுறாத அவதூறுகள் காவிப்புழுதியாய்க் கிளம்பி பெரும்பான்மை மக்களின் கண்ணை மறைப்பது ஏன்?
கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை – ரூ 80
பக்கம்-160
41. வாழ்வும் கலையும் வழக்கு எண் 18/9 – வினவு திரை விமர்சனம்.
துயரமும் போராட்டமும் துரத்தும் வாழ்க்கையை எட்டிப் பார்க்கக் கூட யாரும் விரும்புவதில்லை. அப்படியொரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால், அதையே திரைப்படமாக வடித்துக் காட்டினால், ரொம்ப போரடிக்குது சார் என்று ஒதுங்கிப் போகிறவர்கள் ஏராளம். அப்படி ஒதுங்கிப் போகிறவர்களின் ரசனையை வர்க்க கண்ணோட்டத்துடன் வழக்கு எண் திரைப்படத்துடன் சேர்த்து ஆராய்வது இச்சிறு நூலின் சிறப்பம்சமாகும்.
கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை – ரூ 15
பக்கம்-24
42. ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள் – ச.செந்தில்நாதன்
புதுமைபித்தன் பதிப்பகம்
விலை- ரூ 15
பக்கம் -40.
43. தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும். பேராசிரியர் கே.ராஜய்யன், தமிழில்: நெய்வேலி பாலு
ஐரோப்பிய மரபுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தமிழக தன்மையிலேயே பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உள்ள நிலம் மற்றும் அரசியல் சிக்கல்களை பாளையக்காரர்களின் தோற்றத்திலிருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் இந்நூல் விவரிக்கிறது.
கருத்து பட்டறை
விலை – ரூ 120
பக்கம் – 158
44. கஷ்மீர் மக்களின் கண்ணீர் கதைகள்
விடியல் வெள்ளி இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு
இலக்கியச்சோலை வெளியீடு
விலை: ரூ 60
பக்கம் -156.
45. தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் – இரு நூற்றாண்டு வரலாறு – அருணன்
வசந்தம் வெளியீடு
விலை – ரூ 200
பக்கம் -384
46. தலித் – சுதந்திரப் போராட்டம்
தெரிந்த உண்மைகள் – தெரியாத வரலாறு
கேப்டன் S கலியபெருமாள்
புத்தர் ரிசர்ச் அகேடமி
விலை- ரூ 120
பக்கம்-196
47. இவர்தான் நாராயண குரு
ஜோசப் இடமருகு (தலைவர், இந்திய பகுத்தறிவாளர் சங்கம்)
நாளந்தா பதிப்பகம்,
விலை- ரூ 35
பக்கம்-102.
48. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை –
– மார்க்ஸ் எங்கெல்ஸ்
கீழைக்காற்று
விலை – ரூ 40
பக்கம் -128
49. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்
பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்… கணேசன் (ஐயர்)
இனியொரு
விலை- ரூ 150
பக்கம்-224.
50. காந்தியார் கொலை – அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
தந்தை பெரியார் அறிக்கைகளும் துசார் காந்தி எழுதிய ’Let’s kill Ganthi’ ஆங்கில நூலின் முக்கியப் பகுதிகளும்
திராவிடர் கழக வெளியீடு
விலை – ரூ 100
பக்கம் – 193
51. கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
விலை – ரூ 20
பக்கம் -40
52. நாங்கள் சும்மா இருந்தாலும் நாடு விடுவதாயில்லை, துரை.சண்முகம்
வெளியீடு:
ம.க.இ.க, சென்னை.
விலை – ரூ 20
பக்கம் -40
53. பொது உடைமைக் கல்வி முறை – குரூப்ஸ்காயா
சோவியத் ஒன்றியத்தில் சோசலிசமுurயைக் கட்டியெழுப்புவதற்கு நடைபெற்ற வர்க்க போராட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர் – உழவர்களிடையே புதிய கல்வி இயக்கம் எழுந்தது. இந்த இயக்கத்தைக் கட்டியெழுப்பியும், வளர்த்தும், மார்க்சிய-லெனினிய அடிப்படைகளைப் புதிய சூழல் தேவைகளுக்கேற்ப படைப்பாற்றலுடன் கையாண்டு பொதுவுடைமை கல்வி முறையின் அடிப்படை கோட்பாடுகளை குரூப்ஸ்காயா உருவாக்கினார். இந்நூல் கட்டுரைகள் பொதுவுடைமை கல்வி முறையின் அடிப்படை கோட்பாடுகளை எடுத்து விளக்குகின்றன.
முகம்
விலை – ரூ 70
பக்கம்-112
54. முறிந்த பனை
இலங்கையில் தமிழர் பிரச்சினை – உள்ளிருந்து ஒர் ஆய்வு
ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம், கே.ஸ்ரீதரன்
பயணி வெளியீடு
விலை: ரூ 450
55. மோடி: வளர்ச்சி என்ற முகமுடி
வெளியீடு:
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, வி.வி.மு, பெ.வி.மு
விலை- ரூ 20
பக்கம் -32
56. கார்ப்பரேட் என்.ஜி.ஓ-க்களும் புலிகள் காப்பகங்களும்
என்ன நடக்கிறது இந்தியக் காடுகளில் கட்டுரைகளின் தொகுப்பு – இரா.முருகவேள்
பொன்னுலகம் பதிப்பகம்,
விலை – ரூ 50
பக்கம் -67
57. உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் சிகிச்சையும், தடுப்பு முறையும்
குழந்தை வளர்ப்பில் ஏற்படும் குறைபாடுகள், தாய் சேய் உறவில் தோன்றும் பிணக்குகள், சமூக உறவில் ஏற்படும் சிக்கல்கள், பாலுணர்வில் ஏற்படும் மாற்றங்கள், தனி மனித உணர்ச்சிப் போராட்டங்கள் இவற்றை இந்நூல் எடுத்துரைக்கிறது.
நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை – ரூ 150
பக்கம் – 296
58. ஹிக்ஸ் போசான் வரை இயற்பியலின் கதை – ஆயிஷா இரா.நடராசன்
இயற்கை எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்ந்து அறிவதே இயற்பியல். இயற்பியலின் வரலாறை தொடக்கம் முதல் சமகாலம் வரை வாசகர்களுக்கு உவப்பான மொழி நடையில் புதினம் போல விவரித்து சொல்கிறார் ஆசிரியர். இயற்பியலின் எண்ணற்ற புதிர்களையும் இரகசியங்களையும் வரலாற்றின் அடிப்படையில் தகுந்த சான்றாதாரங்களுடன் விவரித்து செல்கிறது இந்நூல்.
பாரதி புத்தகாலயம்
விலை- ரூ 100
பக்கம் -208.
59. உயிரினங்களின் தோற்றம் – சார்லஸ் டார்வின்
உயிரனங்கள் படைக்கப்பட்டது பற்றி அது வரை நிலவி வந்த கருத்துக்களுக்கும் குறிப்பாக கிருஸ்துவ பைபிளில் சொல்லப்பட்டுள்ள கருத்தாக்க்கங்களுக்கும் பலத்த அடி கொடுத்து வரலாற்றில் குப்பைக்கு எறிந்த புரட்சிகரமான நூல் டார்வினின் உயிரினங்களின் தோற்றம்.
விடியல் பதிப்பகம்
விலை – ரூ 65
பக்கம் -136
60. சட்டங்கள் ஆணையங்கள் நடுவர் மன்றங்கள் திட்டங்கள்….
அரசுத் தோட்டத்தில் ஏட்டு சுரைக்காய்கள் புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரைகள்.
இந்தியாவின் மத்திய மாநில ஆட்சியாளர்கள் அடுக்கடுக்காக கொண்டுவரும் சட்டங்கள், சமூக நலத்திட்டங்களை ஆய்வு செய்து அதன் அரசியல் பின்னணியை அறியத்தருகிறது இந்நூல்.
கீழைக்காற்று
விலை : ரூ 50
பக்கம் – 80.
61. ஆண்குழந்தை யார்? பெண் குழந்தை யார்?
ஆண், பெண் பால் வேறுபாட்டையும், ஆண் பெண் குழந்தை ஏற்றதாழ்வுகள் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றன என்பதையும் எளிமையாக குழந்தைகளுக்கு விளக்கும் நூல்.
கமலாபாசின், கே.கே.கிருஷ்ணக்குமார் மொழியாக்கம்: யூமாவாசுகி
பாரதி புத்தகாலயம்
விலை – ரூ 15
பக்கம் -24.
62. கணிதத்தின் கதை – ஆயிஷா இரா.நடராசன்
இதுவரை யாரும் தொகுக்காத கணிதத்தின் வரலாறு. உலக அளவிலான கணித மேதைகளின் பங்களிப்பு இந்நூலில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. கணிதத்தின் வரலாறு என்பது மனித குலத்தின், அறிவியல் வளர்ச்சியின் வரலாறாகும்.
பாரதி புத்தகாலயம்
விலை – ரூ 50
பக்கம் -112.
புத்தகங்கள் கிடைக்கும் இடம்
கீழைக்காற்று
முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி…
வேலை நாட்கள் : பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
விடுமுறை நாட்கள் : காலை 11 முதல் இரவு 9 வரை
கடை எண் : 369-370
10.01.2014 முதல் 22.01.2014 வரை
ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்வி மைதானம், நந்தனம், சென்னை.