Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
எண் : 41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை – 95,
பேச : 9445112675 | rsyfchennai@gmail.com

  • மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே!
  • தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே!
  • அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து !
  • அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்கு!

என்ற முழக்கங்களுடன் அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றது புமாஇமு. அதன் ஒரு பகுதியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புமாஇமு சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 7.02.2014 அன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சென்னைக் கிளைச் செயலர் தோழர்.வ.கார்த்திகேயன் தலைமை ஏற்றார். மாநில அமைப்புக்குழு உறுப்பினர் த. நெடுஞ்செழியன் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

– புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, சென்னை