Tuesday, April 22, 2025
முகப்புசெய்திதிருச்சியில் மகளிர் தினம் : பெண்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்

திருச்சியில் மகளிர் தினம் : பெண்கள் விடுதலை முன்னணி பொதுக்கூட்டம்

-

திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக பேரணி/பொதுக்கூட்டம். அனைவரும் வருக!

ணாதிக்கம் இருட்டடிப்பு செய்த வாழ்க்கையை மீட்டெடுக்கவும் ஆண்களையும் சேர்த்து வதைக்கும் மறுகாலனியாக்கத்தை வீழ்த்தவும்

உலக மகளிர் தினம் அழைக்கிறது! மார்ச் 8 2014

பேரணி
மாலை 4.30
பிரபாத் தியேட்டர் பேருந்து நிறுத்தம், பாலக்கரை.

பொதுக்கூட்டம்
மாலை 6.30
தாராநல்லூர், காந்திமார்கெட் அருகில்.

சிறப்புரை :

தோழர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

தோழர் அனீஸ் பாத்திமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுக்கோட்டை.

ம.க.இ.க மையக் கலைக்குழவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

புத்தகத்தை பார்த்து
புதுக்கோலம் போடும்
விழாக்காலமல்ல இது
புதைந்து போன வாழ்வை
புனரமைக்கும் புரட்சிகர தினம்!

பெண்ணே!

அடுப்படி உருட்டும் எலி, பூனையா
அழுக்கு நீக்கும் சலவைக்கல்லா
ஆம்பளை ருசிக்கும் பண்டமா
அழகே உலகென்ற பிண்டமா!
சமையல் கூடத்து இயந்திரமா – நீ
கழுவி கவிழ்க்கும் பாத்திரமா
சாம்பார், ரசமென வாழாதே
உப்பு, ஊறுகாயென்று சாகாதே

உலகில் சுவைகள் கோடி உண்டு – அதில்
உனக்கும் பங்குண்டு மறவாதே!

தொலைக்காட்சி விளம்பரத்தின் தேவதாசியா! உன்
தொடை, இடுப்பு, உடம்பு முதலாளியின் குத்தகையா
ஆம்பளை போடும் ஜட்டி, பனியன், ஷாம்பு, சென்ட்க்கு
ஆசைப்படுவியா – அந்த
அழகில் மயங்கி அவன் பின்னே வாழ போவியா!

அட சனியனே என
சகித்து கொண்டு வாழாதடி!
சண்டைக் கோழியா மாறி – ஊடகத்தினரின்
சிண்டை பிடித்து உலுக்கடி!

மாமாக்கள் கூடாரம் திரை உலகம்
பெண்ணின் சதையே இவர்கள் மூலதனம்!
சீரழிவு புற்று நோயை சினிமா பெருக்குது அந்த
புற்றுலேயே தீயை வைக்க புறப்படு!

வானுயர்ந்த மால்களிலே
பொருட்கள் குவித்து கிடக்குது!
அதை வாங்க முடியாதபடிக்கு
பொருளாதாரம் தடுக்குது!

ஏக்கபெருமூச்சுவிட்டு
என்னலாபமடி!
ஏற்றத்தாழ்வுக்கு காரணமே
அரசின் புதிய கொள்கையடி!

டாஸ்மாக் போதையிலே
குடும்பதலைவனை தள்ளாட வைக்குது!
அரசு ஊர்குடி கெடுத்து
உலகமயத்தை ஊக்குவிக்குது!

உழைக்கும் பெண்களே!
உன்னால் நடக்க வேண்டிய காரியம்
ஓராயிரம் உண்டு – மகளிர் தினம்
அறை கூவி அழைப்பது உன்னைதான்!

சமூகவிடுதலையை சாதிப்போம்!
முதலாளித்துவ சுரண்டலை ஒழித்துக்கட்டுவோம்!
ஆண் வர்க்கத்தோடு இணைந்து
ஆணாதிக்கத்தையும் முடிவு கட்டுவோம்!

pvm

தகவல்

பெண்கள் விடுதலை முன்னணி
திருச்சி மாவட்டம்
தொடர்புக்கு: 9750374810.