Monday, April 21, 2025
முகப்புவாழ்க்கைபெண்மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

மதுரையில் உழைக்கும் மகளிர் தினக் கூட்டம்

-

துரை பகுதி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக மார்ச் 8 உழைக்கும் பெண்கள் தினத்திற்காக தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையின் அனுமதியும் பெறப்பட்டது. தேர்தல் தேதி அறிவித்தவுடன் கூட்டத்தை ரத்து செய்வதாக காவல் துறை கடிதம் வழங்கியது. மாவட்ட தேர்தல் அதிகாரிக்குத்தான் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இருக்கிறது, எனவே அவரை பார்த்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்று காவல்துறை தனது பெறுப்பிலிருந்து கழண்டு கொண்டது.

ஆனால் மாவட்ட ஆட்சியரை பார்த்து அனுமதி பெறச்சென்றால், ஆட்சியர் அலுவலகத்தில் உங்களுடைய பகுதி தாசில்தாரை பாருங்கள், அவர்தான் அனுமதி தருவார் என்றனர். ஆனால் தாசில்தாரோ எனக்கு அதிகாரம் இல்லை ஆட்சியர்தான் தரவேண்டும் என்று அவரும் கழண்டு கொண்டார். புரட்சிகர அமைப்புகள் கூட்டங்களுக்கு அனுமதி கேட்டால் பந்தாடும் ஆட்சியாளர்கள் இந்து பத்திரிக்கையும் அஞ்சலி நல்லெண்ணெயும் இணைந்து நடத்திய இரு சக்கர வாகனப் பேரணிக்கு மட்டும் அனுமதி வழங்கியுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தாலும் உடனடியாக ஒரு தனியார் இடத்தில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு தோழர் இராணி தலைமை தாங்கினார். இதில் பெ.வி.மு தோழர்கள் ஷீலா, சுகுணா, ஆகியோர் கலந்து கொண்டனர். பெ.வி.மு, மாநில அமைப்பாளர் தோழர் நிர்மலா “ஊடகங்களில் பெண்கள் சித்தரிப்பை அம்பலப்படுத்தியும் பண்பாட்டு விசய‌ங்களில் பெண்களின் நிலையை பற்றியும்” உரையாற்றினார்.

அடுத்து பெ.வி.மு மாநில அமைப்புக்குழு உறுப்பினர் அஜிதா “பெண்கள் உரிமைகளைப் பெற பாராளுமன்றத் தேர்தல் பாதை பயன்படாது என்பதையும், நாடு மறுகாலனியாகி வருகிற சூழலில் நமது குடும்பம் மட்டும் தனியாக சந்தோசமாக வாழமுடியாது என்பதையும் விளக்கி போராட்டம் மட்டுமே தீர்வு” என்று எழுச்சியுரை ஆற்றினார்.

இறுதியில் ம.க.இ.க மதுரை அமைப்பாளர் தோழர் இராமலிங்கம்  “பெண் தொழிலாளர்களின் அவலநிலைமையை உணர்ச்சிபூர்வமாக” எடுத்துரைத்தார்.

உரைகளுக்கிடையில் புரட்சிகர பாடல்களும், டாஸ்மாக் சாராய கடைகளால் பெண்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்கும் நாடகமும் நடத்தப்பட்டது. தோழர் லதா நன்றியுரை வழங்கினார்.

கூட்டம் சுற்று வட்டார மக்களிடம் நல்ல தாக்கத்தையும் உணர்வெழுச்சிகளையும் ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது.

[படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க