Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்டி.வி.எஸ் ஹரிதாவுக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம்

டி.வி.எஸ் ஹரிதாவுக்கு எதிராக புஜதொமு ஆர்ப்பாட்டம்

-

சூர் பேளகொண்டப்பள்ளியில் இயங்கி வரும் டி.வி.எஸ் (ஹரிதா) சுந்தரம் ஆட்டோ காம்பொனன்ட்ஸ் ரப்பர் ஆலையில் 64 நிரந்தர தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். மேற்படி ஆலையை கடந்த ஆண்டு 2013 மார்ச் 31-ல் மும்பையை சேர்ந்த மெகா ரப்பர் ஆலைக்கு விற்று விட்டனர். இதில் வேலை செய்த தொழிலாளர்கள் சர்வீஸ் தொடர்ச்சியுடன் வேலை வழங்கக் கோரியதின் பேரில் 12 தொழிலாளர்களை சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்தனர். மற்ற தொழிலாளர்களை மிரட்டி பல வெற்றுத் தாள்களில் கையொப்பம் பெற்று, அவர்கள் புதிய தொழிலாளர்களாக மெகா ரப்பர் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். இதுவரை அந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கான ஆணை வழங்கவில்லை. இந்த இரண்டு நிர்வாகத்தையும் எதிர்த்து வழக்கு நடந்து வருகிறது.

எனவே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக 11.03.2014 அன்று மாலை 5 மணிக்கு பேளகொண்டப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் பாஸ்கர் தலைமை தாங்கினார். திருமதி அனிதா, பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிசந்திரன், மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக தோழர் கோபாலகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார். நிர்வாகிகள் இரா சங்கர், வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க