Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தொழிலாளிக்கு நீதி கேட்டு விருதை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

-

என்.எல்.சி தொழிலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து விருத்தாசலம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

த்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் என்.எல்.சி தொழிலாளி ராஜ்குமார் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதையும், அவரது சகதொழிலாளிகளை தமிழக காவல்படை விரட்டி அடித்ததையும் கண்டித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி மாணவர்களும் தோழர்களும் 19-03-2014 அன்று காலை கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மாணவர்களை சந்தித்து, “ஒரு தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டதை கண்டித்து தொழிலாளிகளுக்காக நாம் போராட வேண்டும்” என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை ஏற்றுக் கொண்டு காலையில் 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்துக்கு தயாராக இருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாணவி, மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள்.  தோழர்களின் முழக்கங்களை  மாணவர்களும் முழக்கமிட ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்குப் பிறகு  மாணவர்கள் செய்முறை தேர்வில் கலந்து கொள்ள சென்றனர்.  மாணவர்கள் கல்லூரி முன் இதுபோன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது இதுவே முதல்முறை.  “உங்களுடைய உரிமைகளை நாங்கள் தடுக்கவில்லை” என்று பேராசிரியர்களும்ஆதரவு கொடுத்தார்கள்.

மாணவர்கள் பிரச்சனைக்கு மட்டுமின்றி தொழிலாளர், விவசாயிகள் பிரச்சனைக்கும் மாணவர் சமுதாயம் குரல் கொடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மத்தியில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற காட்டுமிராண்டிகளை கடுமையாக தண்டிக்க நாங்கள் போராடுவோம் என்று மாணவர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
புமாஇமு,
கடலூர் மாவட்டம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க