Tuesday, April 22, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்இசுலாமிய மக்களை மிரட்டும் பாஜகவின் பாசிசம் - வீடியோக்கள்

இசுலாமிய மக்களை மிரட்டும் பாஜகவின் பாசிசம் – வீடியோக்கள்

-

கார்ப்பரேட் கும்பலுக்கான வளர்ச்சியையே நாட்டு மக்களின் வளர்ச்சி என்று மாய்மாலம் செய்யும் பாஜக கும்பல் இன்னொரு புறம் தான் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன இந்துமதவெறி பாசிசக் கட்சி என்பதையும் வெளிப்படையாகவே காட்டி வருகிறது. நாடெங்கிலும் அவர்கள் பேசிவரும் அந்த வெறிப்பேச்சின் வீடியோக்கள்

1. கேரளாவின் ஆலப்புழாவில் விஸ்வ இந்து பரிஷத் பிரவீன் தொகாடியா கொலவெறியுடன் இசுலாமிய மக்களை மிரட்டும் பேச்சு (ஏப்ரல் 15, 2014)

“யாருக்காவது தனி நாடு வேண்டுமென்றால் அவர்கள் பாகிஸ்தானுக்கு போகட்டும். முஸ்லீம்கள், முஸ்லீம் தலைவர்கள், முஸ்லீம் லீக், மகாத்மா காந்திக்கு பதில் சொல்ல வேண்டியிருக்காது, பிரவீன் தொகாடியாவுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் பாரதத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். முசாஃபர் நகரை மறந்து விடாதீர்கள், அசாமில் கோக்ராஜாரை மறந்து விடாதீர்கள், குஜராத்தை மறந்து விடாதீர்கள்”.

2. பீகாரில் கிரிராஜ் சிங் -மோடியை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் போய் விட வேண்டும்

“நரேந்திர மோடியை தடுக்க முயற்சி செய்பவர்கள், பாகிஸ்தான் ஆதரவை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பாரதத்தில் எந்த இடமும் இல்லை என்று ஆகி விடும். நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு அவர்கள் பாகிஸ்தானுக்கு போக வேண்டியதுதான்.” – ஏப்ரல் 18-ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தியோகர் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க முன்னாள் தேசியத் தலைவர் நிதின் கட்காரியின் முன்னிலையில் பீகார் நாவடா தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் கிரிராஜ் சிங் பேச்சு. (என்.டி.டி.வி வீடியோ)

3. பீகாரின் மரபணுவிலேயே சாதீயம் உள்ளது – பீகார் மக்களை இழிவுபடுத்தும் நிதின் கட்காரி

4. ஹிந்து வீட்டை முஸ்லீம்கள் வாங்கத் தடை விதித்ததோடு காலி செய்ய கெடுவும் விதித்த தொகாடியா – (செய்தி )

“இந்து சொத்துக்களை முஸ்லீம்கள் வாங்குவதை தடை செய்ய வேண்டும். இந்த கட்டிடத்தை வாங்கியவர் 48 மணி நேரத்துக்குள் இடத்தை காலி செய்து விட வேண்டும். இல்லை என்றால் கற்கள், டயர்கள், தக்காளிகளுடன் அவரது அலுவலகத்துக்கு செல்லுங்கள் ” – பவநகரில் ஏப்ரல் 19, 2014 அன்று ஒரு முஸ்லீம் வணிகர் வாங்கிய கட்டிடத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விஸ்வ இந்து பரிஷத்தின் பிரவீன் தொகாடியா , அந்த வீட்டை கைப்பற்றி பஜ்ரங் தள் பெயர்ப் பலகை மாட்டும் படி கூட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.

பவநகரில் காவி கும்பல்கள், ராம் துன், ராம் தர்பார் என்ற பெயர்களில் முஸ்லீம்கள் இந்துக்களிடமிருந்து சொத்துக்களை வாங்குவதை தொடர்ந்து தடுத்து வருகின்றன. “பவநகரை கலவரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வைப்பதன் மூலம் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் சொத்துக்களை வாங்கி விற்பதை தடுக்க வேண்டும் அல்லது அப்படி விற்கப்படும் கட்டிடங்களை பலவந்தமாக ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கை இழுத்தடித்து சமாளித்துக் கொள்ளலாம்” என்று தனது கூலிப்படைகளுக்கு வழி காட்டியிருக்கிறார் தொகாடியா.