Tuesday, April 22, 2025
முகப்புசெய்திசென்னை - பெங்களூரு நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்

சென்னை – பெங்களூரு நண்பர்களை சந்திக்க அழைக்கிறோம்

-

ன்புள்ள நண்பர்களே,

வினவு தளத்தின் ஆறு ஆண்டுகள் அனுபவத்தில் பல வாசகர்கள், பதிவர்கள், மாற்று அமைப்பினர், பத்திரிகையாளர்களை இணைய அறிமுகத்தில் துவங்கி பின்னர் நேரில் சந்தித்திருக்கிறோம். அவர்களை தேடி நாங்கள் சென்றதும், சிலர் எங்களை தேடி வந்ததுமாய் நடந்த உரையாடல் இருதரப்பினருக்கும் பல வகையில் பயனுள்ளதாய் இருந்து வருகிறது.

குறிப்பிட்ட பிரச்சினைகளில் அவை அரசியலோ, சினிமாவோ, இலக்கியமோ எதுவாக இருந்தாலும் வினவு கட்டுரைகள் குறிப்பிட்ட கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. அந்த நோக்கு மக்கள் நலனிலிருந்தும், மார்க்சிய லெனினிய அரசியல் அடிப்படையிலிருந்தும் எழுதப்படுகிறது. என்றாலும் எமது பார்வை வாசகரின் ஐயங்களை தீர்க்கவோ இல்லை சமயங்களில் அதிகப்படுத்தவோ கூட செய்யலாம். ஆனாலும் இந்த உரையாடல் ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கு உற்சாகத்தை தருகிறதென்று நம்புகிறோம்.

சலிப்பும், சோர்வும், என்ன செய்ய முடியுமென்ற நம்பிக்கையின்மையும் கோலோச்சும் இந்த அரசியல் சமூக அமைப்பில், அநீதிகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் அகற்ற முடியுமென்ற உறுதியுடன் வினவு செயல்படுவதே அந்த உற்சாகத்தின் பின்னணி. அதே நேரம் உங்களுக்கு வினவு குறித்தும், எமது அரசியல் பார்வை பற்றியும் பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள், தெரிவிக்க வேண்டிய விசயங்கள் இருக்கலாம்.

அவற்றை அறிந்து கொண்டு எமது முயற்சிகளை கூர் தீட்டுவதற்கு  உங்களை சந்திக்க் விரும்புகிறோம். அதே நேரம் வாசக நிலையிலிருக்கும் நண்பர்கள், சமூக மாற்றத்திற்கு பங்களிப்பு செய்யும் வண்ணம் தோழர்களாக மாறுவதும் இருந்தால்தான் இரு தரப்பும் தம்மை பரஸ்பரம் செம்மைப்படுத்தும் செயலை  செய்ய முடியும்.

மேலும், உங்களது வாழ்க்கை வேலை நிமித்தம் சில வரம்புகளைக் கொண்டிருந்தாலும் இயன்ற அளவு நீங்களும் வினவோடு இணையலாம், பங்களிப்பு செய்யலாம். அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், சினிமா, ஊடகம் எது வேண்டுமானாலும் உங்கள் துறையாக இருக்கலாம். உங்களது ஆர்வம், தனிப்பட்ட திறமைகளும் பல வகையாக இருக்கலாம். இவை அனைத்தும் ஒரு சமூக அக்கறைக்கென மெருகூட்டப்படும் போது சமூகம் மட்டுமல்ல, ஒரு தனி நபரும் பட்டை தீட்டப்படுவார்.

அல்லது இவை எவையும் இல்லாமல் இருந்தாலும் கூட நீங்கள் எங்களை சந்திக்கலாம். வாருங்கள் – கரம் கோர்ப்போம்.

சென்னையில் இருக்கும் நண்பர்கள் வரும் ஞாயிறு அன்று 04.05.2014 மாலை 4 மணி முதல் 7 மணி வரை கீழ்க்கண்ட அலுவலகத்திற்கு வருகை தரலாம்.

முகவரி:
புதிய கலாச்சாரம் அலுவலகம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
இரண்டாவது அவன்யூ, அசோக் நகர்,
சென்னை – 600083

தொடர்பு கொள்ள
தொலைபேசி – (91) 99411 75876, vinavu@gmail.com
______________________________

பெங்களூருவில் இருக்கும் நண்பர்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். எமது தோழர்கள் அங்கு உங்களை தொடர்பு கொண்டு உங்கள் வசதிக்கேற்ப சந்திப்பார்கள்.

தொடர்பு கொள்ள
தொலைபேசி – (91) 99411 75876, vinavu@gmail.com

இதர ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் இருக்கும் நண்பர்கள் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் – இயன்ற வரை சந்திப்பதற்கு முயல்கிறோம்.
_________________________________