புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி கடலூர் மாவட்டம்  சார்பாக இந்த கல்விஆண்டில் அமைப்பு வட்டார  பகுதியில்  பு.மா.இ.மு  அறிமுக இயக்கம் பலவேறு வ்டிவங்களில் நடத்தப்பட்டது.

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில்

  • அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் வேலை! என்பதை அடிப்படை உரிமையாக்குவோம்! வேலையில்லாத் திண்டாட்டத்தை வேரோடு ஒழிக்கப் போராடுவோம்!
  •  அனைவருக்கும் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஜனநாயகபூர்வமான, விஞ்ஞான பூர்வமான கல்வி இலவசமாக கிடைக்கப் போராடுவோம்!
  •  தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தாய்மொழியை பயிற்றுமொழியாக்கப் போராடுவோம்!

ஆகிய முழக்கங்களுடன் சுவர் விளம்பரம் எழுதப்பட்டது. மேலும் அரசு பள்ளிகளின் மாணவர்  தேர்ச்சியையும்  அதற்கு காரணமான பெற்றோர்களையும் பாராட்டி பள்ளிக்கூட வாயில்களில்  பேனர்கள் வைக்கப்பட்டன.  இது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தது.

அதன் தொடர்ச்சியாக “1,80,726 மாணவர்களுக்கு 4,724 ஆசிரியர்களே உள்ளனர்” என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் அடித்து  அரசு குடியிருப்பு மற்றும் வட்டார பகுதிகளில் அரசுப் பள்ளிகளின் சாதனைகளையும் தனியார்மய கொள்கைகளையும், அரசுப்  பள்ளிகளின்  சீர்கேட்டையும்  அரசின்  கையாலகாத போக்கையும் அம்பலப்படுத்தி  பிரச்சார இயக்கம் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது.  அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதன் மூலமாகதான்  இந்த  தனியார் பள்ளிகளின்  கொள்ளையை  தடுத்து நிறுத்த  முடியும்.

சுவரெழுத்து பிரச்சாரம் – புகைப்படங்கள்

துண்டறிக்கை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இவண்

புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்

துண்டு பிரசுரம்

  • 1 லட்சத்து 80 ஆயிரத்து 726 மாணவர்களுக்கு 4724 ஆசியர்களே உள்ளனர்.
  • கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளின் சீர்கேட்டை மந்திரக்கோலால் மாற்ற முடியாது! போராட்டத்தின் மூலமாகவே மாற்ற முடியும்.

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே, ஆசிரியப் பெருமக்களே

“கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சைப் புகினும் கற்கே நன்றே” என்று அவ்வைப்பாட்டியும் “கண்ணுடைய ரென்பவர் கற்றோர், முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர்” என்று வள்ளுவனும் அனைவரும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். ஆனால், இந்த அரசோ, அத்தகைய கல்வியை நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களுக்கு மறுத்து வருவதை கடலூர் மாவட்ட அரசு பள்ளிகளை பார்க்கும் எவராலும் மறுக்க முடியாது.

கடலூர் மாவட்டத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,80,726 மாணவர்கள் படிக்கிறார்கள். பள்ளிகளை பற்றி ஆய்வு செய்ததில் 6,024 ஆசிரியர்கள் இருக்க வேண்டும் ஆனால் 4,724 ஆசிரியர்களே இருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான கழிப்பிட வசதி, நூலகம், குடிநீர் வசதி இல்லாமலே இருக்கிறது.

இது போன்று போதிய வசதிகள் இல்லாமலே தேர்ச்சி விகிதத்தில் முன்னேறியுள்ளனர். 2013-2014 கல்வி ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 84.17%, இது கடந்த ஆண்டேவிட 12% கூடுதலாகும். 10-ம் வகுப்பில் 83.71%. இது கடந்த ஆண்டைவிட 9% கூடுதலாகும். மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களே!

சுமார் 8 மணிநேரம் பள்ளிகூடத்தில் அடைந்திருக்கும் மாணவர்கள் தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் எப்படி கல்வி கற்க முடியும்? இந்த கேள்விகளை கேட்க பெற்றோர்கள், மாணவர்கள், யாரும் முன் வருவதில்லை என்ற காரணத்தினால் பள்ளிகளின் அவலம் ஒழியவில்லை, நம் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்கவில்லை.

இது போன்று கடலூர் மாவட்ட பள்ளிகளின் குடிநீர், கழிவறை, போதிய வகுப்பறை, ஆசிரியர்கள், தரமான ஆய்வுக்கூடம், நூலகம் ஆகிய அடிப்பை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எமது பு.மா.இ.மு. அமைப்பு பெற்றோர்கள், மாணவர்களை திரட்டி பல கட்ட போராட்டத்தில் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளது. கடலூர் மாவட்டம் முதலிடம் பெறும்வரை எமது போராட்டம் ஓயாது…

எங்கள் மதிப்பிற்குரிய பெற்றோர்களே,

அரசு பள்ளிகள் நம் பள்ளிகள் அவற்றை பாதுகாப்பதும், தரம் உயர்த்த போராடுவதும் நம் கடமை. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 10,12-ம் வகுப்பு மாணவர்கள் பல அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டி சாதித்துள்ளனர். அடிப்படை வசதிகளே இல்லாமல் மாவட்ட பள்ளிகளில் ஆசிரிய பெருமக்களின் கடுமையான உழைப்பினால் பெற்ற இந்த வெற்றி நாம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டிய மிகப்பெரிய சாதனையில்லையா?

பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் நலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவை மனித வாழ்க்கைக்கு அவசியம் என்றால் அந்த மனிதன் அன்பு, கருணை, இரக்கம், நீதிநெறி ஒழுக்கங்கள் எனும் மனித மாண்புமிக்கவனாக, எதையும் சாதிக்கும் பேராற்றல் கொண்டவனாக சமூகத்தோடு இணைந்து வாழும் முழு மனிதனாவதற்கு அவசியமானது கல்வி. விலங்கிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுவது கல்விதான். அது வியாபாரப் பண்டமல்ல. ஒரு உன்னதமான சேவை. எனவே, அரசே தன் சொந்த செலவில் அனைவருக்கும் அலவசமாக, தரமான கல்வியை வழங்க வேண்டும். அதை விட்டுவிட்டு தனியார்மயமாக்குவது, நாட்டை குட்டிசுவராக்குவதற்கு சமம். எனவே, எந்தக் காரணத்தைச் சொல்லியும் மாவட்டப் பள்ளிகளை தனியார்களிடம் ஒப்படைக்க முயன்றால் அதை முறியடிப்போம். அதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஒற்றுமையைக் கட்டியமைப்போம்.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.
செல்: 9442391009

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சென்னையில் கல்லூரிக்கு வரும் மாணவர்களை வரவேற்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியிட்டிருக்கும் செய்தி

பேனர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க