சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !
கடந்த சனிக்கிழமை (ஜூன் 27, 2014) சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 17 தொழிலாளிகள் பலியாகியிருக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தப்பிப் பிழைத்தவர்களும் தமது சொற்ப உடமைகளை கட்டிட இடிபாடுகளில் பறிகொடுத்து விட்டு ஏதிலிகளாக விடப்பட்டுள்ளனர். புதையுண்டவர்களின் உறவினர்களோ என்ன ஏது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். வினவு செய்தியாளர் குழு நேரில் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில :















