Tuesday, April 22, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகல்வி உதவித் தொகையை உடனே வழங்கு !

கல்வி உதவித் தொகையை உடனே வழங்கு !

-

பள்ளி கல்வி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித் தொகையை உடனே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

இடம் : பேருந்து நிலையம் அருகில், திருவாரூர்
நாள் : 28.07.2014 திங்கள்
நேரம் : காலை 11 மணி

  • பொதுப்பள்ளி அருகாமைப் பள்ளி முறையை அமுல்படுத்து !
  • திருவாரூர் நகர மையப் பகுதியில் அரசுப்பள்ளி உடனே உருவாக்கு !
  • குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளைப் பள்ளி, கல்லூரிகளில் செய்து கொடு !

ஆர்ப்பாட்டத்துக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் முரளி தலைமை வகித்தார். பு.மா.இ.மு தோழர் தோழர் சிறீதரன் முன்னிலை வகித்தார்.

உரை :
தோழர் கணேசன்
, பு.மா.இ.மு மாநில அமைப்பாளர்
தோழர் ஆசாத், பு.மா.இ.மு மாவட்ட அமைப்பாளர்
கு.ம.பொன்னுசாமி, மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழு மாவட்ட அமைப்பாளர்

தோழர் கணேசன் பேசும் போது, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் , பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும் , பொதுப்பள்ளி-அருகாமைப் பள்ளி முறையை உடனே அமல்படுத்துவது குறித்தும், அரசாங்கம் கல்விக்குக் குறைந்த அளவே நிதியை ஒதுக்குவதனால் பள்ளி, கல்லூரிகளின் தரம் மிகவும் குறைந்து வருகிறது, அதனால் மாநில அரசுகளும், மத்திய அரசும் கல்விக்குத் தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டியதின் அவசியம், கல்வித் துறையில் இருந்து தனியாரை அப்புறப்படுத்த வேண்டயதின் முக்கியத்துவம் , கல்வித்துறை மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட வேண்டிய தேவை, இறுதியில் திருவாரூர் நகர மையப்பகுதியில் அரசுப் பள்ளியை உடனே தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர் புமாஇமு ஆர்பாட்டம்

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருவாரூர்
தொடர்புக்கு : திருவாரூர் 99434 94590

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க