Monday, April 21, 2025
முகப்புஉலகம்அமெரிக்காஇசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !

இசுரேலுக்கு ஆதரவாக கோவை இந்து மதவெறி வானரங்கள் !

-

கோவை

வர்க்கப் போராளிகளும் வானரப் படையும்..!

கோவை கணுவாய், KNG புதூர் பகுதிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதைக் கண்டித்து சுவரொட்டிகளும், “பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்து” எனும் ஆர்ப்பாட்ட சுவரொட்டிகளும் புஜதொமு தோழர்களால் பரவலாக ஒட்டப்பட்டன.

கோவையில் நீண்ட காலமாகவே எமது அமைப்புகளுக்கு சுவரொட்டி ஒட்ட போலிசு தடை உள்ளது. அனுமதி இன்றி ஒட்டக் கூடாது என்று காவல் துறை அறிவுறுத்தும். சுவரொட்டி ஒட்டியதற்காக பல வழக்குகள் முன்னணியாளர்கள் மீது போடப்பட்டு உள்ளது. பல தோழர்கள் பல முறை சிறை சென்றும் வந்திருக்கின்றனர். கோவையில் போலி ஜனநாயகம் இப்படித்தான் சந்தி சிரிக்கிறது.

“சரி சுவரொட்டி ஒட்ட அனுமதி தாருங்கள்” எனக் கேட்டால் ‘ஆட்சேபகரமான வாசகம் உள்ளது எனவே அனுமதி இல்லை’ என்பார்கள்.

இந்நிலையில் காவல் துறை அனுமதி இல்லாமல்தான் சுவரொட்டி ஒட்டுகிறோம். ஒட்டும் போது காவல்துறை கண்ணில் பட்டால் கைதும் வழக்கும் உண்டு. பிரிக்கால் HR ராய்.ஜார்ஜ் தொழிலாளர்களால் தண்டிக்கப்பட்ட போது அதனை ஆதரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிக்கு பொறுப்பாளர் எனும் அடிப்படையில் தோழர்.விளவை இராமசாமி மீது போடப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட உடனே கோபம் கொண்ட இந்து மத வெறியர்கள் சுவரொட்டிகளைக் கிழித்தும். கிழிக்க முடியாத சுவரொட்டிகள் மீது கருப்பு மையால் கிறுக்கியும் உள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நமது சுவரொட்டிகள் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்துள்ளன என பெருமை அடைகிறோம்.

காவல் துறையிடம் புகார் கொடுத்தால் அனுமதி இன்றி சுவரொட்டி ஒட்டியதற்காக நம் மீது வழக்கு தொடர தயாராக இருக்கும் நிலையில் இப்படி கிறுக்கி தமது ஆத்திரத்தை வெளிப்படுத்திய இந்து மதவெறியர்கள் தீ வைக்கும் வானரப் படை மட்டுமல்ல.. இவர்கள் சப்பாத்தியையும் திணிப்பார்கள்; சுவரொட்டியையும் கிழிப்பார்கள். தாங்கள் இதை எல்லாம் செய்வது தேவை என்கிறார்கள். ஆனால் மற்றவர்கள் செய்தால் பயங்கரவாதம் என்பார்கள்.

மோடி ஆட்சி 5 ஆண்டு காலத்திற்குள் தங்களது வானரக் கிளைகளை எல்லாப் பகுதிகளிலும் வளர்த்து விட வேண்டும் என இந்து மதவெறியர்கள் துடிப்பாக உள்ளனர்.

அவர்களது முயற்சிகளுக்கு எம்முடைய புரட்சிகர அமைப்புகள், சுவரொட்டி பிரச்சாரங்கள் மிகுந்த இடையூறாக உள்ளன. இதனால் கடும் வெறுப்போடு எதிர் வினை ஆற்றுகிறார்கள். இசுலாமியர்கள் என்றால் மத வெறியை தூண்டி நாடகம் போடலாம். ஆனால் எமது அமைப்பு மீது அவ்வாறு அவதூறு செய்ய இயலாத நிலையில் சுவரொட்டிகளை கிழிக்கின்றனர்.

தொழில் நகரான கோவையை தொழில்நகரமாகவே பராமரிக்க வேண்டுமெனில், இன்னொரு குண்டு வெடிப்பு நிகழாமல் தடுக்க வேண்டுமெனில், மொத்தத்தில் கோவையை காப்பாற்ற வேண்டுமெனில் இந்து மத வெறியை களத்தில் சந்தித்து முறியடித்தே தீர வேண்டும்.

கோவை பாட்டாளி வர்க்கம் இந்து மதவெறியை எதிர் கொள்ளும். மீண்டும் குலைக்க முடியாதபடி வீழ்த்தும்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கோவை

__________________________

திருச்சி

பாலஸ்தீன காஸா மீதான இசுரேலின் ஆக்கிரமிப்புப் போரை முறியடிப்போம்!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் திருச்சியில் 31.07.2014 அன்று காலை 10 மணியளவில் மரக்கடை இராமகிருஷ்ணா பாலம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம்,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்தின.

சுவரொட்டிகள், பதாகைகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இக்கூட்டத்தினை பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் தோழர்.சுந்தர்ராஜன் அவர்கள் தலைமையேற்றி நடத்தி வைத்தார். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் திருச்சி மாவட்ட தலைவர் தோழர் காவிரிநாடன் அவர்கள் கண்டன உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர் காளியப்பன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் ஓவியா நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்ட படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பட்டத்தில் கரூர், தஞ்சை பகுதி தோழர்களும் கலந்து கொண்டனர்.

ம.க.இ.க.வின் மையக் கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் இடம்பெற்றன.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி