
மோடி அரசின் சமஸ்கிருத வாரத்துக்கு எதிராக பார்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்தி பிடிக்கும் வகையில்
ஆகஸ்டு 07 முதல் 13 வரை
- சமஸ்கிருத எதிர்ப்பு வாரம் கடைபிடிப்போம்!
- பார்ப்பன எதிர்ப்பு தமிழ் மரபை உயர்த்திபிடிப்போம்!
என்ற வாசகம் அடங்கிய கருப்பு பேட்ஜை அடித்து கடலூர் மஞ்சகுப்பத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, பெண்கள் மேல்நிலை பள்ளி, மற்றும் கந்தசாமி நாயுடு கலைக் கல்லூரி, பெரியார் கலைக் கல்லூரி ஆகிய பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களை சந்தித்து இந்தித் திணிப்பை பற்றியும் அதனை எதிர்த்து நின்று போராடிய தமிழ் மரபைப் பற்றியும் மாணவர்களிடம் விளக்கி பேசப்பட்டது .
இந்த வாரம் முழுவதும் கருப்பு பேட்ஜை அணிந்து கொள்ளும்படி கூறியதும் மாணவர்கள் ஆர்வமாக அணிந்து கொண்டார்கள். கே என் சி கல்லூரியின் முதல்வர் கருப்பு பேட்ஜை அணிந்து நமது போராட்டத்துக்கு ஆதரவு தந்தார். மேலும் பெரியார் கல்லூரி தமிழ்த் துறை மாணவர்கள் நமது அமைப்பின் கருப்பு பேட்ஜை பெற்றுக்கொண்டு அனைத்துத் துறை மாணவர்களிடமும் கொடுத்து எதிர்ப்பை பதிய வைத்தார்கள்.

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்