Wednesday, April 23, 2025
முகப்புசெய்திதிருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்

திருச்சி :இந்தி எதிர்ப்பு போராளி நடராசன் நினைவேந்தல்

-

னவரி-25 தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு. இந்நாளில் திருச்சி உழவர் சந்தை அருகில் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் மாலை அணிவித்து உறுதியேற்பு நிகழ்ச்சி எமது அமைப்பு மற்றும் எமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக நடத்த உள்ளோம்.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டுஇதன் ஒரு பகுதியாக சனவரி-15 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலியான முதல் போராளி நடராசனின் நினைவை நெஞ்சில் ஏந்தும் விதமாக மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியார் சிலைக்கு 15.01.2015 அன்று காலை 10 மணியளவில் மாலை அணிவித்து, உறுதியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டு1965 சனவரி 25 தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்ட களம் கண்ட நாள். அத்தகைய வீரம் செறிந்த இந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தின் பொன்விழா (50வது) ஆண்டும் இவ்வாண்டுதான் என்பதை நம் நினைவில் நிறுத்தி மீண்டும் படையெடுத்து வருகிற ஆரிய-பார்ப்பன, வேத, வைதீக, சமஸ்கிருத-இந்தி ஆதிக்க பண்பாட்டை வெட்டி வீழ்த்த களமிறங்குவோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.க மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய இரு புரட்சிகர அமைப்புகள் சார்பாக தமிழகம் முழுவதும் பிரச்சாரங்களை செய்து வருகிறோம்.

ஏனெனில் 1937-ல் தொடங்கி இன்று வரை இந்தியை திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இதில் அவ்வப்போது ஆரிய-பார்ப்பன கூட்டம் பின் வாங்கினாலும், இன்று பா.ஜ.க. தலைமையில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மீண்டும் தன் ஆரிய சாம்ராஜ்ஜிய கனவை நிலைநாட்ட முன்னை காட்டிலும் அதிகமாகவே துடிக்கிறது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் பொன்விழா ஆண்டுஅரசு சமூக வலைத் தளங்களில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட உத்திரவிட்டதும், பல்கலைக் கழகங்களில் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்கியதும், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்று பெயர் மாற்றியதும் அனைவரும் அறிந்ததே. இது வெறும் இந்தியை திணிக்கும் திட்டம் மட்டுமல்ல, பல தேசிய இனங்கள் வசிக்கும் நம் நாட்டில் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே பண்பாடு என்ற ஆரிய-பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பலின் நீண்ட நாள் கனவான அகண்ட பாரதத்தை உருவாக்குவது, சமஸ்கிருதமயமாக்குவது, பார்ப்பனியமாக்குவது என்ற திட்டத்தின் பகுதிகள்தாம் இவை.

சமஸ்கிருதத்தை காட்டிலும் தொன்மை வாய்ந்த, செம்மொழிக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரே மொழி, நமது மொழிதான். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று பொதுவுடமை பேசிய, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சமத்துவம் கொண்ட பண்பாடு, தமிழ் பண்பாடுதான்.

trichy-mozhi-por-remembrance-6

இதை உயர்த்தி பிடிக்கும் வகையில்

  • 1937-லும்,1965-லும் தமிழ்மொழி, இனம் காக்க போராட்ட களம் கண்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி வீறுகொண்டெழுவோம்!
  • வேத,வைதீக,பார்ப்பன-சமஸ்கிருத-இந்தி எதிர்ப்பு போரின் தளப்பிரதேசமாக தமிழ்நாட்டை கட்டியமைப்போம்!
  • இதை சாதிக்க மாணவர்கள், உழைக்கும் மக்கள் அமைப்பாக அணிதிரள்வோம்

என்ற நீண்ட போராட்டத்தின் ஒரு அம்சமாகத்தான் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தியாகி நடராசனின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பு.மா.இ.மு.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.செழியன் மற்றும் ம.க.இ.க நிர்வாக குழு உறுப்பினர் தோழர்.ஜீவா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி