Saturday, April 19, 2025
முகப்புசமூகம்நூல் அறிமுகம்புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில

புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று நூல்கள் சில

-

இந்திய இழிவுஇந்திய இழிவு

– அருந்ததி ராய்
தமிழில் நலங்கிள்ளி

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 25
பக்கங்கள் : 32

சாதி அமைப்பை
அழிக்க முடியுமா?

நாம் நமது மண்டலத்தில்
விண்மீன் நிலைகளை
மாற்றியமைக்கத் துணிவு
காட்டாத வரை,

புரட்சியாளர்கள் எனச்
சொல்லிக் கொள்வோர்
தங்களைப்
பார்ப்பனியத்தின் தீவிர
விமர்சகர்களாக மாற்றிக்
கொள்ளாதவரை,

பார்ப்பனியத்தைப் புரிந்து
கொண்டோர் தங்களின்
முதலாளித்துவ
விமர்சனத்தைக்
கூர்மைப்படுத்திக்
கொள்ளாத வரை

சாதியை அழிக்க முடியாது.

 

bharathi-avalamபாரதி அவலம்

– மருதையன்

வெளியீடு : கீழைக்காற்று

விலை : ரூ 30
பக்கங்கள் : 48

கொண்ட கொள்கைக்காக…

நஞ்சருந்திச் செத்தான்
சாக்ரடீஸ்.

தூக்கில் தொங்கினான்
பகத்சிங்.

போர் வீரர்களுடன் வீரனாக
செத்துக் கிடந்தான்
திப்பு சுல்தான்.

கண்ட துண்டமாக
வெட்டிக் கொல்லபட்டான்நக்சல்பாரிக் கவிஞன்
சராஜ் தத்தா.

இவர்களது மரணம் எதுவும்
அவலமாகக் கருதப்படவில்லை
சித்தரிக்கப்படுவதுமில்லை…

உலகின் அழகு உழைக்கும் வர்க்கம்

துரை. சண்முகம்

working-class-beautyவிலை : ரூ 20
பக்கங்கள் : 46

சுரண்டும் வர்க்கத்திற்கு
எதிரானப் போராட்டத்தில்
தொழிலாளிக்கு கவிதையும் ஒரு ஆயுதமே!

முரண்படும் விதிகளின்
முடிச்சுகள் அவிழ்த்து
உலகை இயங்க வைக்கும்
தொழிலாளியே…

உலகையே கவிதையாக்கும்
உன்னதப் படைப்பாளி
உனக்கின்றி கவிதை யாருக்கு!

 

 

 

 

 

 

 

paaliyal-vanmurai

பாலியல் வன்முறை – யார் குற்றவாளி

வெளியீடு – கீழைக்காற்று
விலை : ரூ 80/-
பக்கங்கள் : 144

படுக்கவும், சுகிக்கவும்
நீ சிதைக்கவுமோ பெண்?

மனித இனத்தையே
படைத்தவள், காத்தவள் பெண்ணடா!

அவள் மட்டும்
ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணடா!

ஞானிகள்…
விஞ்ஞானிகள்…ஏன்
உன் கடவுளுக்கே
“ஃபிரம் அட்ரஸ்” பெண்ணடா!

புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் கிடைக்குமிடம்

எண்: 80-81 (முதல் நுழைவாயில்)

38-வது சென்னை புத்தகக்காட்சி
சென்னை ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி,
நந்தனம், சென்னை – 35

நாள் : சனவரி 9 – 21 (9 – 1 – 2015  முதல் 21 – 1 – 2015 வரை)

நேரம்:
வேலைநாட்கள் : மதியம் 2 – இரவு 9 – மணி வரை
விடுமுறைநாட்கள் : காலை 11 – இரவு 9 – மணி வரை