Wednesday, April 23, 2025
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்

சட்டக்கல்லூரி மாணவர்களை ஆதரித்து பு.மா.இ.மு போராட்டம்

-

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல், சென்னை – 95, போன்; 9445112675

தேதி : 06.02.2015

சென்னை சட்டக்கல்லூரியைக் காக்க போராடிய மாணவர்கள் மீது
கொலைவெறித் தாக்குதல் நடத்திய போலீசாரைக் கைது செய்ய வேண்டும்.

பு.மா.இ.மு வின் கண்டன அறிக்கை.

  • 150 ஆண்டுகால பாரம்பரியம் மிக்க சென்னை சட்டக் கல்லூரியை இடம் மாற்றுவது என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்க அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.
  • போராடும் மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனைக் கண்டிப்பதோடு இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்ட போலீசு அதிகாரி, தாக்குதல் நடத்திய போலீசார் ஆகியோர் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பல்வேறு சமூகப் பிரச்சனைகளில் அதை எதிர்த்து முதலில் குரல்கொடுப்பவர்கள் சட்டக்கல்லூரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் குறிப்பாக சென்னையின் மையமான இடத்தில் அமைந்துள்ள இந்தக் கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஒரு தாக்கத்தை உருவாக்குவதாகவும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருந்துள்ளது. 1965 இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தொட்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் வரை இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. பல அரசியல் தலைவர்களும், போராளிகளும் உருவாகும் களமாகவும் இக்கல்லூரி இருந்து வருகிறது.

இந்த மாணவர்களின் போர்க்குணத்தை மழுங்கடிக்கவும், சமூகப்பற்றை, நாட்டுப்பற்றை அறுத்தெரியவும், மிக முக்கியமாக ’மாணவர்களுக்கு அரசியல் கூடாது’ என்று கூறி அரசியல் அரங்கிலிருந்து மாணவர்களை விலக்கி வைக்கவும் தான் அரசு திட்டமிட்டே உரிமைக்காக போராடும் மாணவர்களை ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிக்கிறது.

மாணவர்களிடையே சாதி வெறியைத் தூண்டிவிட்டு மோதல்கள் உருவாக காரணமாக இருப்பதிலும் அரசின் பங்குண்டு. உதாரணம் 2008-ல் சென்னை சட்டக்கல்லூரியில் ஆதிக்க சாதி வெறியாட்டத்திற்கு வழிவகுத்துக் கொடுத்ததோடு. போலீசார் அதை கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்துவிட்டு, மோதல் உச்சத்திற்கு சென்ற பின்பு அதைக் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என மாணவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு பழிவாங்கியது. இன்று மாணவர்களிடையே வெளிப்படும் சில ஒழுங்கீனங்களை( அதற்கும் காரணம் அரசுதான் ) காரணம் காட்டி போலீசை ஏவி தாக்குவது, பொய் வழக்கு ஜோடித்து சிறையிலடைப்பது; கல்லூரிக்குள் கண்காணிப்பு கேமராவை வைத்து மாணவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயக உரிமைகளையும் பறிப்பது என மாணவர்களை குற்றப்பரம்பரையினராகவே கருதி கல்லூரிகளை சிறைச்சாலைகளாக்கி வருகிறது அரசு.

அதே நேரத்தில் உழைக்கும் மக்களின் பிள்ளைகள் அதிகம் படிக்கக் கூடிய சில முக்கிய கல்லூரிகளை சென்னை மாநகரத்தில் இருந்தே அகற்றி சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற அவ்வப்போது முயற்சித்தும் வருகிறது. ஏற்கனவே தலைமைச் செயலகம் கட்டுவதற்காக என்று கூறி மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள். அது அக்கல்லூரி மற்றும் பிற கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் தடுக்கப்பட்டது. அடுத்து மெட்ரோ ரயில்பாதைக்காக என்று சொல்லி பச்சையப்பன் கல்லூரியை அகற்ற முயற்சித்தார்கள் அதை எதிர்த்து மாணவர்கள் – பேராசிரியர்கள் போராடியதால் அந்த முயற்சி தகர்க்கப்பட்டது. இன்று சட்டக் கல்லூரியை குறி வைக்கிறது அரசு.

2008-ல் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கிடையே நடந்த சாதி மோதலையும் (ஆதிக்க சாதி வெறியாட்டம் என்றே சொல்ல வேண்டும்), இன்று அவ்வழியே போடப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தையும் காரணமாக சொல்லி சட்டக்கல்லூரியை மாற்ற திட்டமிடுவதன் உண்மையான நோக்கம் முதலாளிகளும், மேட்டுக்குடிகளும், உயர் அதிகாரிகளும் சுகபோகமாக வாழ கல்லூரி மாணவர்களின் போராட்டம் இல்லாத மாநகரமாக சென்னையை மாற்றுவதுதான். அதாவது உரிமைக்கான போராட்டக் குரல்கள் எழும்பும் அரசு கலை, அறிவியல், சட்டக்கல்லூரிகளை மாநகரத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான்.

இது அபாயகரமானது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் படிப்பு பாழாகும் என்பதுடன், தற்போது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ( ஆள் நடமாட்டம் இல்லாத ஒதுக்குப்புறங்களில் ) தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கொத்தடிமைகளைப் போல் இருக்கும் நிலைதான் இவர்களுக்கும் ஏற்படும். அதாவது இந்த அரசு கல்லூரிகள் எதிர்காலத்தில் தனியார்மயமாக்கப்படும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டமுடியாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதோடு ஆரம்பத்திலேயே சொன்னது போல் சமூகப்பற்று, நாட்டுப்பற்று அறுத்தெரியப்பட்டு இவர்கள் முடமாக்கப்படுவார்கள்.

எனவே, பல்வேறு அபாயங்களுக்கு வழிவகுக்கும் சட்டக்கல்லூரியை மாற்றும் அரசின் திட்டத்தை முறியடிக்க போராடும் மாணவர்களுக்கு அனைவரும் தோள்கொடுக்க வேண்டும். இதை அக்கல்லூரி மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒதுங்கக் கூடாது. அப்படி ஒதுங்குவதால்தான் போராடிய மாணவர்கள் மீது போலீசார் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார்கள். இந்த கொடூரத்தை இனியும் அனுமதிக்காமல் இருக்க சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு அனைத்துக்கல்லூரி மாணவர்களும், பெற்றோர்களும், உழைக்கும் மக்களும் ஆதரவளிக்க வேண்டும். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் தற்போது உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். நேரில் சென்று அந்த மாணவர்களை சந்தித்து ஆதரவை தெரிவிப்பதுடன் போராட்டத்தை வளர்த்தெடுக்க அவர்களுக்கு உதவுவதுதான் நம் அனைவரின் கடமை என பு.மா.இ.மு கருதுகிறது.

இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

  • சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது  போலீஸ் கொலை வெறித்தாக்குதல்
  • மெட்ரோ இரயிலுக்காக கல்லூரியை இடிப்பதா?
  • எதிர்த்து கேட்ட மாணவர்களை மாட்டைப் போல் அடிப்பதா?
  • உரிமைக்காக போராடும் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்.
  • மாணவர் வர்க்கமாய் அணிதிரண்டு போராடுவோம்!

kovilpatti-rsyf-demo-4என்ற தலைப்பில் தூத்துக்குடி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர் மணிகண்டன் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் 6.2.2015 அன்று காலை 9 மணியளவில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதுவரை கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக கோவில்பட்டியை சுற்றிலுமுள்ள பத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து பேசி சட்டக்கல்லூரி மாணவர்களின் போரட்டத்தின் நியாயத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் காவல் துறையின் ரவுடி ராஜ்யத்தை எதிர்த்து முழக்கங்கள் போடப்பட்டன.

kovilpatti-rsyf-demo-3ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை ஆற்றிய பு.மா.இமு. தூத்துக்குடி மாநகர குழு உறுப்பினர் தோழர் மணிகண்டன் பேசியதாவது :

“சடடக்கல்லூரி மாணவர்களின் போராட்டம் ஏதோ ஒரு தனிப்பட்ட கல்லூரியின் போராட்டமல்ல.

மெட்ரோ ரயிலுக்காகவும், பறக்கும் பாலத்துக்காகவும் இந்த அரசால் அடித்து துரத்தப்படும் சென்னை கூவம் கரையோரம் வாழும் மக்கள் இந்த அரசை எதிர்த்த போராட்டத்தோடு இணைந்தது.

ஏழை – எளிய மக்களின் மீதான இந்த அரசின் அடக்குமுறைக்கு  எதிரானது.

அது மட்டுமில்லாமல் போராடும் மாணவர்களுக்கு இதுதான் கதி என நடந்து கொள்ளும் போலீசின் ரவுடி ராஜ்யத்திற்கு எதிரானது.”

kovilpatti-rsyf-demo-1தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தூத்துக்குடி.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

போராட்டம் இது போதாது…போராடு இது பேயாட்சி…!

சென்னை சட்ட கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து கோவையில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

kovai-rsyf-demo-supporting-law-students-3

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை