Tuesday, April 22, 2025
முகப்புஉலகம்ஐரோப்பாஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !

ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !

-

பிராங்ஃபெர்ட் `1ஜெர்மனியின் ஃபிராங்க்பெர்ட் நகரில் அமைந்துள்ளது ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) தலைமை அலுவலகம். மார்ச் 18, 2015 அன்று பெரும் செலவில் தனது அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தை திறக்க இருந்தது இவ்வங்கி. இந்த புதிய கட்டிடத்தை மட்டும் 1.3 பில்லியன் யூரோ செலவில் கட்டி முடித்துள்ளார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக அமல்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் இவ்வங்கியே காரணம். கிரீஸ் போன்ற நாடுகளை திவாலாக்கியது இவ்வங்கியின் ‘சாதனைகளில்’ ஒன்று.

மக்கள் வீசு வீசப்பட்ட கண்ணீர் குண்டு
மக்கள் வீசு வீசப்பட்ட கண்ணீர் குண்டு

இப்பேற்பட்ட வங்கி என்றால் ஐரோப்பாவில் உள்ள மக்களுக்கு அலர்ஜியும் வெறுப்பும் இயல்பாகவே இருக்கும். ஐ.எம்.எஃ.ப், உலக வங்கி போல கடன் கொடுத்துவிட்டு கடுமையான நிபந்தனைகள் விதிப்பது, பல்வேறு பொருளாதார பிரச்சினைகளில் வல்லரசு நாடுகளின் நலனுக்குகந்த வகையில் நடந்து கொள்வது இவ்வங்கியின் வழக்கம்.

frankfurt 4இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள இடதுசாரி அமைப்புகள் – கட்சிகள் ஒன்று சேர்ந்து Blockupy எனும் கூட்டமைப்பை உருவாக்கி இவ்வங்கியின் புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்க முடிவு செய்தன. கடன் சுமையால் நாடுகளும், மக்களும் சிரமப்படும் போது இத்தகைய ஆடம்பரங்களுக்கு அவசியமில்லை என்று அந்த கூட்டமைப்பு பிரச்சாரம் செய்து தனது போராட்டத்திற்கு அணிதிரட்டியது.

frankfurt 5முதலாளித்துவம் தோன்றி வளர்ந்த ஐரோப்பிவில்தான் முதலாளித்துவ எதிர்ப்பும் கொடி கட்டி பறக்கிறது. அந்த அளவு முதலாளித்துவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே அரசியல் முழக்கங்களோடு முதலாளித்துவம் ஒழிக என்று போராடுகிறார்கள். அதன்படி இந்த ஆர்ப்பாட்டமும் ஜெர்மன் அரசே எதிர்பாராத அளவில் பெரும் ‘வன்முறை’யில் முடிந்திருக்கிறது.

frankfurt 6ஆயிரக்கணக்கான மக்கள் சினம் கொண்டு கலந்து கொண்ட இப்போராட்டத்தின் இறுதியில் மூன்னூறுக்கும் அதிகமான போராளிகள் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் போலிசார் காயமடைந்துள்ளனர். போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டு வங்கிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

frankfurt-7முகமூடி அணிந்த அனார்க்கிஸ்ட் இளைஞர் குழு சடுதியில் பல மில்லியன் யூரோக்கள் சேதம் விளைவிக்கும் வண்ணம் தாக்குதலில் ஈடுபட்டனர். தெருவில் தடையரண் போடப்பட்டு போலீசாருடன் மோதினார்கள் மக்கள். வங்கியின் புதிய கட்டிடத்தை சுற்றி போடப்பட்ட போலீஸ் தடையரண்கள் பல எரிந்து கொண்டிருந்தன.

frankfurt-8போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக அவர்கள் பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.

முதலாளித்துவம் அமைதியையும், மகிழ்வையும் கொண்டு வராது என்பதற்கு அதனால் பாதிக்கப்பட்ட ஜெர்மன் மக்களின் போர்க்குணமிக்க இந்த போராட்டம் ஒரு சான்று. முன்னேறிய மேற்குலகிலேயே முதலாளித்துவம் ஒழிக என்று தெருச் சண்டைகள் ஆரம்பிக்கும் காலத்தில் இங்கே வளர்ச்சி என்ற பெயரில் மோடி பிராண்டு முதலாளித்துவம் மக்களை ஒடுக்கி வருகிறது.

தற்போது ஜெர்மனியில் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு பல நூறு மக்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கையே முடங்கும் அளவுக்கு தண்டனை வழங்குவார்கள். அதனால் போராட்ட உணர்வு மங்கிவிடுமா?

இன்று திட்டமிடப்படாமல் தன்னெழுச்சியாக நடக்கும் இந்த முதலாளித்துவ எதிர்ப்பு நாளைக்கே திட்டமிட்ட ரீதியில் சோசலிசத்திற்கான போராக மாறும். அத்தகைய கம்யூனிசக் கட்சிகள் இன்னும் அங்கே வலுவடையவில்லை என்ற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு வல்லரசு நாடுகள் அமைதி அடைய முடியாது.

போராடும் ஜெர்மன் மக்களுக்கு தோள் கொடுப்போம்!
முதலாளித்துவத்திற்கு இறுதிக் கல்லறை கட்டுவோம்!!

போராட்டம் குறித்த வீடியோ:

புகைப்படங்கள், வீடியோ நன்றி: rt.com