செய்தி : விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மேலும் 3 குழந்தைகள் மரணம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
விழுப்புரம்அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உள்ள குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 4 பச்சிளம் குழந்தைகள் நேற்று முன்தினம் காலை 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து இறந்தன. ஏற்கெனவே, 4 குழந்தைகள் இறந்த நிலையில் மேலும் 3 குழந்தைகள் இறந்ததால் இரண்டு நாளில் குழந்தைகளின் உயிரிழப்பு 7ஆக உயர்ந்தது.