Wednesday, April 23, 2025
முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

ஐ.ஐ.டி டீனை கைது செய் ! பு.மா.இ.மு போராட்டம்

-

rayf iit protest (3)

rayf iit protest (1)

rayf iit protest (2)

ஐ.ஐ.டி.யை ஆக்கிரமித்துள்ள பார்ப்பன கும்பலை விரட்டியடிப்போம்! புமாஇமுவினர் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்ட அமைப்பை தடை செய்து பார்ப்பனத் திமிரை வெளிப்படுத்திய ஐ.ஐ.டி நிர்வாகத்தை கண்டித்து, 30-05-2015 அன்று பல்வேறு மாணவர் அமைப்பினர் போராட்டங்கள் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதனால், ஐ.ஐ.டி வளாகத்தின் முன்பாக காலையிலிருந்தே ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான இந்திய அளவிலான ஊடகங்களும் வந்து குவிந்திருந்தன. அந்த சாலை முழுவதுமே ஊடகங்களாலும், காவல்துறையாலும் நிரம்பி வழிந்தது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுப்பதற்காக அனைத்து வாயில்களிலும் போலிசார் தடுப்புகளை அமைத்திருந்தனர்.

சுமார் பதினோரு மணி அளவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மோடி அரசிற்கு எதிராகவும், கருத்து சுதந்திரத்தை பறிக்காதே எனவும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். “இது வெறும் கருத்து சுதந்திர பறிப்பு மட்டுமல்ல பச்சையான பார்ப்பன பாசிச நடவடிக்கை” என்பதை அம்பலப்படுத்தியவாறு அவர்களைத் தொடர்ந்து சென்னை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் போராட்டக்களத்தில் இறங்கினர்.

இளம் சிறார்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அந்தப் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். விரைந்து செயல்பட்ட காவல்துறை, “ஊடகங்களுக்கு செய்தி சென்று சேரக்கூடாது” என்பதற்காக பேட்டியளித்துக் கொண்டிருந்த பு.மா.இ.மு மாநில அமைப்பாளர் தோழர் கணேசனின் சட்டை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றது. அதே நேரம் மற்றவர்களையும் அடித்து துன்புறுத்தி போலீசு வாகனத்தில் ஏற்ற துடித்தது. இதனால அந்த பகுதியே கலவரப்பகுதியாக மாறிப்போனது.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக போலீசார் குண்டுகட்டாக தூக்கி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றினர். வாகனத்தில் ஏறும் வரையில் பார்ப்பன பாசிசத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய வண்ணமே இருந்தனர். அதனைத் தொடர்ந்து பு.மா.இ.மு.வின் பெண் தோழர்களை ஏற்றுவதற்காக காவல்துறையினர் முனைந்தனர். உறுதியுடன் இருந்த பெண் தோழர்களை ஏற்ற முடியாததால் போர்க்களமானது சர்தார் பட்டேல் சாலை.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

மாணவர் அமைப்பினர் கொண்டு வந்திருந்த கொடி, தட்டிகளை கிழித்தெறிந்து அராஜகத்தை வெளிப்படுத்தியது போலீசு. இறுதி வரை வளைந்து கொடுக்காத பெண் தோழர்களை துன்புறுத்தும் பணியில் போலிசார் இறங்கினர். தடுப்பிற்காக கட்டப்பட்டிருந்த கயிறில் பெண் தோழர்களை தள்ளிவிட்டு காயப்படுத்தினர். அதையும் மீறி வீரமாக முழங்கிக் கொண்டு பார்ப்பன பாசிசத்தை அமபலப்படுத்தியவாறு பெரியாரை உயர்த்திப்பிடித்தனர் புமாஇமு தோழர்கள்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்பு.மா.இ.மு செய்தி தொடர்பாளர் தோழர் மருது பேசுகையில், “ஐ.ஐ.டி.யில் ஆர்.எஸ்.எஸ்-க்கு தடை இல்லை. ஆனால் பெரியார் அம்பேத்கருக்கு தடை. அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்திற்கான தடையை நீக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். மேலும், அம்பேத்கர் – பெரியார் கருத்துகளை தடை செய்து இழிவுபடுத்திய ஐ.ஐ.டி டீன் சிவக்குமார் சீனிவாசனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

“நாலு பொண்னுங்கதான் அவளுங்கல ஏத்தறுதக்குள்ள நாக்கு தள்ளிடுச்சு” என அங்கிருந்த பெண்காவலர்கள் நொந்து போயினர். கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.
அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அவர்களைத் தொடர்ந்து மத்திய கைலாஷ் பகுதியில் அம்பேத்கர் மக்கள் நீதி இயக்கத்தினரும், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் சுமார் நூறு பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சற்று நேரம் கழித்து யாரோ ஸ்பான்சர் செய்த கார்களில் கண்களில் போதையும், வெறியும் கலந்தவாறு இந்து மக்கள் கட்சி எனும் கோஷ்டியினர் வந்திறங்கினர். கையில் அம்பேத்கர் படத்தையும், திருவள்ளுவர் படத்தையும் கொண்டு வந்திருந்தனர். ‘சென்னை ஐ.ஐ.டி.க்கு அம்பேத்கர் பெயரை சூட்ட வேண்டும் அதே சமயம் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தினை தடை செய்ய வேண்டும்’ என உளறினர்.

இந்த சில்லுண்டிகளது நோக்கம் பெரியாரை ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து ஒழிக்க வேண்டும் என்பதே. ஏற்கனவே பெரியார் சிலைகளை சேதப்படுத்தி ஆட்டம் போட்ட இந்த சிறு வானரக் கூட்டம் இங்கும் தனது விசம வாலை ஆட்டியவாறு வந்தது. எதிர்ப்பு என்ற பெயரில் போராட்டத்தின் நியாயத்தை சாவடிக்க இந்த என்.ஜி.வோ டெக்னிக்கை இந்த கூட்டம் கையிலெடுத்தாலும், தமிழக மக்கள் செருப்படி கொடுத்து இந்த ஜந்துவை ஒழிப்பார்கள்.

இந்த ஜந்துகள் வெளியே பேசுவதை உள்ளே இருக்கும் பார்ப்பனக் கூட்டம் அமல்படுத்தியிருக்கிறது.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக இன்று சென்னையில் உள்ள கல்லூரியிலேயே பெரியாருக்கு தடை விதித்துள்ளது பார்ப்பனக் கூட்டம்.

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

இனியும் இதை அனுமதித்தால் தமிழகத்தை அடுத்த குஜராத்தாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இருக்காது. உறங்கும் தமிழகமே விழித்தெழு என்பதனை உணர்த்துவது போல் அமைந்தன இன்றைய போராட்டங்கள்.

பு.ஜ செய்தியாளர்கள்.
சென்னை.

மேலும் புகைப்படங்கள்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

 

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தடை - பு.மா.இ.மு கண்டன போராட்டம்திருவாரூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சுவரொட்டிப் பிரச்சாரம்

iit-aspc-rsyf-tvr-poster